நடிகையை காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்ட விஜயகாந்த்?… கடைசியில் பிரேமலதாவுடன் திருமணம் நடந்தது எப்படி?..

தமிழ் சினிமாவில் பல நடிகர்களை பின்பற்றும் ரசிகர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே விரும்பும் ஒரு நடிகர் என நிச்சயம் விஜயகாந்தை சொல்லலாம். இதற்கு காரணம், சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு ஹீரோவாக இருந்தது தான். திரைப்படங்களில் பல தடைகள் தாண்டி ஜெயித்த விஜயகாந்த், அனைவரையுமே சமமாக நடத்தக் கூடிய பழக்கத்தை உடையவர்.

அதே போல, பிரபலங்கள் மற்றும் முன் பின் தெரியாத யாராக இருந்தாலும் ஓடி சென்று அவர்களுக்கு உதவி செய்வதில் கில்லாடி விஜயகாந்த் தான். வெளியே தெரியாமல் பல உதவிகளை விஜயகாந்த் செய்துள்ள சூழலில், பல பிரபலங்கள் தங்கள் நேர்காணல்களில் இது பற்றிய உண்மையை உடைத்திருந்தனர். அப்படி ஒரு தங்க மனம் படைத்த விஜயகாந்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே சரியில்லாமல் இருந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்த விஜயகாந்த், தேமுதிக கட்சி கூட்டம் ஒன்றில் மேடையில் தோன்றி இருந்தது பலரையும் மனம் நொறுங்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது. இதற்கு காரணம், கம்பீர குரலுடன் வீர நடை போட்டு வந்த விஜயகாந்த், பேசவே முடியாமல் ஒதுங்கி இருந்தது தான். மேலும் இந்த நிகழ்வில், தேமுதிகவின் பொது செயலாளராக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், விஜயகாந்த் – பிரேமலதா திருமணத்திற்கு முன்பாக நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வந்த விஜயகாந்த், ஒரு நடிகை மீது விருப்பம் கொண்டதுடன் அவரை திருமணம் செய்யவும் ஆசை கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது. ஆனால், இதற்கு அந்த நடிகையின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிகிறது

இதற்கிடையில், வஜோதிடம் மீது அதிக நம்பிக்கை கொண்டு விஜயகாந்த் இருந்த போது, பிரேமலதாவின் ஜாதகம் விஜயகாந்துடன் திருமணம் செய்வதற்காக வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது ஜோதிடர் ஒருவர், அந்த நடிகையை நீ திருமணம் செய்தால் உனது சினிமா வாழ்க்கை முடிந்து விடும் என்றும் பிரேமலதாவை திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கூற, அதன் பின்னர் தான் அந்த நடிகையை மறந்து பிரேமலதாவை திருமணம் செய்யவும் விஜயகாந்த் சம்மதம் சொன்னதாக தகவல்கள் கூறுகின்றது.

தனது கணவரின் உடல்நிலை தற்போது மோசமாக இருக்கும் சூழலில், உடனிருந்து ஒரு குழந்தையை போல பார்த்துக் கொண்டு வருகிறார் பிரேமலதா. மேலும் இந்த தம்பதியருக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய் பிரபாகர் என இரண்டும் மகன்களும் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.