ஏழரை சனி பிடிச்சிட்டாம் விஜய்சேதுபதிக்கு… ஆனா மனுஷன் சொன்ன தில் ஸ்டேட்மெண்டைப் பாருங்க!

தமிழ்த்திரை உலகில் ‘மக்கள் செல்வன்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜய்சேதுபதி. மிகுந்த தன்னம்பிக்கைக் கொண்ட இவர் தனது அனுபவத்தால் பல்வேறு தடைகளைத் தாண்டி படிப்படியாக திரை உலகில் முன்னுக்கு வந்தவர். துபாயில் கணக்குப்பிள்ளையாக…

vijay sethupathi

தமிழ்த்திரை உலகில் ‘மக்கள் செல்வன்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜய்சேதுபதி. மிகுந்த தன்னம்பிக்கைக் கொண்ட இவர் தனது அனுபவத்தால் பல்வேறு தடைகளைத் தாண்டி படிப்படியாக திரை உலகில் முன்னுக்கு வந்தவர். துபாயில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்த இவர் அங்கிருந்து சினிமா மோகத்தால் சென்னை வந்து சாதித்தவர்.

எந்த இடத்தில் வேலை பார்த்தாரோ அங்கேயே இவரது படமும் ரிலீஸ் ஆகி அங்குள்ள சுவரொட்டியில் ஒட்டப்பட்டுள்ளது. இன்று கமல் நடத்திய பிக்பாஸ் சீசனையே நடத்தும் அளவுக்கு டெவலப் ஆகியுள்ளார். தனது படமான மகாராஜா சீனா வரை போய் வெற்றி கொடி நாட்டி இவரது பெயரை நிலைநாட்டியுள்ளது.

ஜாதகத்தைப் பார்த்துப் பயந்து வாழும் மனிதர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம். வாங்க இவர் தனது ஜாதகத்தில் பார்த்தபோது வந்த ஏழரை சனி குறித்து என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

உங்களுக்கு ஏழரை சனி பிடிச்சிருக்கு. நீங்க இன்னும் 10 வருஷம் கழிச்சி தான் சினிமாவுல கொடிகட்டிப் பறப்பீங்க. நீங்க திரும்ப ஃபாரினுக்கேப் போயிடுங்கன்னு சொன்னாங்க. அதுக்கு நான் ஏழரை சனி பிடிச்சா ரொம்ப நல்லது. அவர் கெடுதல் பண்ணல. அவர் கத்துக்க சொல்றாரு.

10 வருஷம் கழிச்சு நான் வந்த உடனே சினிமாவுல தூக்கி உச்சத்துல உட்கார வைப்பாங்களா? எனக்கு வேலை தெரியணும்ல. வேலையை எவன் எனக்கு கற்றுக் கொடுப்பான்? இங்க இருந்தா தான் நான் கத்துக்க முடியும். அதனால ஏழரை சனி பிடிக்கிறது ரொம்ப நல்லது. நான் இங்க இருந்து கத்துக்குறேன்னு சொன்னேன். அதனால் நான் சினிமாவுக்கு கஷ்டப்பட்டு வரல. கத்துக்கிட்டு வந்தேன் என்கிறார் விஜய் சேதுபதி.