தமிழ்ப்பற்று என்பது வெறும் பேச்சில் மட்டும் இருந்தால் போதாது. அது செயலிலும் வேண்டும் என்று நிரூபித்தவர்கள் தான் இவர்கள். ஒன்லி தமிழ் படம் மட்டும்தான் நடிப்பேன். வேறு படமா நோ நோ என்று கெத்தாகச் சொன்ன அந்த ஹீரோக்கள் யார் யாருன்னு பாருங்க.
கேப்டன் விஜயகாந்த்
1979 ல் இயக்குனர் M.A.காஜா ‘வால் அறிமுகப்படுத்தப்பட்ட இனிக்கும் இளமை யில் தன் தமிழ் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த விஜயகாந்த் தன் 156 வது படமான “தமிழன் என்று சொல்” வரை , வெறும் தமிழ் படங்களில் மட்டுமே நடித்து சாதனை புரிந்தவர் .
இவர் உச்சத்தில் இருந்தபொழுது , இவரின் அட்டகாச சண்டை காட்சிகளுக்கு மயங்கி , அக்கட தேசத்து தயாரிப்பாளர்கள் , பெரும் தொகையினை சம்பளமாக கொடுக்க முன்வந்தும், எத்தனையோ தெலுங்கு பட வாய்ப்புகளை உறுதியுடன் மறுத்தவர் .
S.S.ராஜேந்திரன்
அன்றைய காலத்தில் S.S.ராஜேந்திரனுக்கு “லட்சிய நடிகர் ” என்றொரு பட்டம் உண்டு . பகுத்தறிவு கொள்கைகளில் பெரும் பற்று கொண்டவரான அவருக்கு, அதிக சம்பளமாக கொடுக்க தயாரிப்பாளர்கள் விழைந்த போதும் , பக்திப் படங்களில் நடிப்பதில்லை என்று லட்சியம் கொண்டிருந்தார் , அதனாலேயே அவரை ” லட்சிய நடிகர்” SSR என்று அழைத்ததாக சொல்வார்கள் .
விஜய்
அவரைப் பின்பற்றி , தன் முதல் படம் துவங்கி ரிலீசுக்கு காத்திருக்கும் தன் அடுத்த படம் வரை தமிழ் மொழியிலேயே நடித்து வருபவர் விஜய் .இவருக்கும் தெலுங்கு மற்றும் மலையாள திரை உலகில் இருந்து வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து தமிழ் மொழி ஒன்றிலேயே நடிப்பதை லட்சியமாக கொண்டவர் .