’டிஎஸ்பி’ படத்திற்கு வெற்றி விழா.. விஜய்சேதுபதிக்கு இது தேவையா?

Published:

விஜய் சேதுபதி நடித்த ’டிஎஸ்பி’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இன்று ’டிஎஸ்பி’ படத்தின் குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் வில்லனாக நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

dsp success1 1அந்த வகையில் மாமனிதன் படத்திற்கு பிறகு மீண்டும் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்த ’டிஎஸ்பி’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்றைய முதல் காட்சி முடிந்ததும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற 5 காட்சிகளில் ஒரு காட்சி கூட முழுமையாக திரையரங்குகள் நிறையவில்லை என்றும் இன்று கிட்டத்தட்ட திரையரங்குகள் அனைத்துமே காலியாக உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

dsp success2இந்நிலையில் ’டிஎஸ்பி’ படக்குழுவினர் இன்று வெற்றி விழாவை கொண்டாடி உள்ளனர். திரையரங்குகளில் வெளியாகி ஒரே நாளில் தோல்வி என்ற ரிசல்ட்டை கொடுத்துள்ள ’டிஎஸ்பி’ படத்திற்கு வெற்றி விழாவா என ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்காக எதற்காக இப்படி வெற்றி விழாவை கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தோல்வி அடைந்த படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுவதால் தான் உண்மையான வெற்றி விழா படங்கள் எவை என்பது தெரியாத நிலை ஏற்படுகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மேலும் உங்களுக்காக...