அஜித்தின் ‘துணிவு’ படத்தை அடுத்து ரஜினியின் படத்தையும் ரிலீஸ் செய்யும் லைகா!

Published:

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற லைகா நிறுவனம் தற்போது ரஜினி படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் 20 ஆண்டுகள் கழித்து தற்போது ரிலீசாக இருப்பதாகவும், டிஜிட்டல் முறையில் இந்த படம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

baba1
இந்த படத்தின் எடிட்டிங் மீண்டும் செய்யப்பட்டதாகவும் பின்னணி இசையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் ரஜினிகாந்த் சில காட்சிகளுக்காக மீண்டும் டப்பிங் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாபா திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

baba trailer

லைகா நிறுவனம் பாபா படத்தின் வெளிநாட்டில் ரிலீஸ் உரிமையை பெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...