தனக்கு தானே பந்தடித்து விளையாடும் விஜய் – கலாய்த்த சீமான்!

Published:

தளபதி நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது, வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி வருகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பழைய முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொள்ள கொண்டனர்.

விஜய் ரசிகர்கள் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி முரட்டுத்தனமாக காவலர்களை தள்ளிவிட்டு சென்றது , மதில் ஏறி குதித்து அரந்தத்தில் சென்றது போன்ற அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றால் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வது வழக்கம் , இந்த கதை தற்போழுது சமூக வலைத்தாலங்களில் டிரெண்டாகி வருகிறது.

அந்த குட்டி ஸ்டோரி குறித்தும் விஜய் குறித்தும் சீமான் கலாய்த்தது தற்போழுது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த சீமான், நம்முடன் விளையாட யாரும் இல்லாத போது நமக்கு நாமே பந்து போட்டு விளையாடுவது போல , நமக்கு நம் மீது கோவம் என்றால் கண்ணாடி பார்த்து பேசிக்கொள்வது போல விஜய் அவர்கள் அவருக்கு போட்டி அவரே என கருதுவது விளையாட்டாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு போட்டி உதயநிதி என வெளிப்படையாக கூறாமல் பாதுகாப்பாக விளையாடுவதாகவும் கலாய்த்துள்ளார். விஜய் இதில் எனக்கு போட்டி நான் என கூறி பின்வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன் – விக்கி ஜோடி! வைரல் புகைப்படம்!

வீரம் என்றால் சிவாஜி தான் மராட்டிய மன்னன் 8 நாள் தொடர்ந்து சண்டை போட்டுள்ளார், நம் பாட்டன் மருது பாண்டி 8 மாதங்கள் சண்டை போடடார்கள் அவர்கள் தான் நிஜ வீரர்கள் என புகழாரம் சுட்டியுள்ளார்.

 

 

 

 

மேலும் உங்களுக்காக...