குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன் – விக்கி ஜோடி! வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் இளைஞர்களின் கனவு கன்னி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இவர் சமிபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

8 வருடங்களாக காதலராக சுற்றி வந்த இந்த ஜோடி ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணமான 4 மாதத்தில் நயனும் விக்னேஷ் சிவன் நாங்கள் அம்மா அப்பா ஆகிவிட்டதாகவும் நயன் விக்கி இருவரும் அவர்களது குழந்தைகளின் கால்களில் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இரட்டை குழந்தைகளுக்கு தாயானதை தொடர்ந்து பல படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் நடித்து சமீபத்தில் வெளியானது, மேலும் இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் , இன்று கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் துணிவு படத்தின் கேங்ஸ்டா பாடல் அப்டேட்! வைரல் வீடியோ!

அதில் குழந்தைகளுடன் நயன் விக்கி ஜோடி மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் தற்ப்பொழுது வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews