தளபதி 68 படத்தில் நடிக்க இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கண்டிஷன் போட்ட விஜய்!

Published:

தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டை தொடர்ந்து தற்பொழுது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் உடன் இணைந்து தளபதி விஜய் லியோ படத்தில் நடித்துள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தின் ஆடியோ லான்ச் அப்டேட்களும், படத்தில் நடித்த பிரபலங்களின் கேரக்டர் குறித்த அப்டேட்களும் தற்பொழுது வெளியாக தொடங்கியுள்ளது. இந்த அப்டேட்டுகளுக்கு போட்டியாக தளபதி விஜய் 68வது படத்தின் அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் தனது அடுத்த படமான தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் மற்றொரு கதாநாயகியாக முன்னணி நடிகை சினேகா அல்லது சிம்ரன் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் இளமையாக தோன்ற வேண்டும் என்பதற்காக தளபதி விஜய் சமீபத்தில் அமெரிக்கா சென்று தனது முகத்தை ஸ்கேன் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இந்த படத்தில் விஜய் அமலாக்கத்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. வித்தியாசமான கதைக் களத்தை கொண்டுள்ள இந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

தளபதி 68 படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார். சமீபத்திய ஒரு பேட்டியில் இந்த படத்திற்கான ரெக்கார்டிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் படத்தின் முதல் பாடல் ரசிகர்களை தெறிக்கவிடும் வகையில் அமைய உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. பொதுவாக வெங்கட் பிரபு படங்கள் என்றாலே சில குறிப்பிட்ட நடிகர்கள் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில் வெங்கட் பிரபுவின் பெரும்பாலான படங்களிலும் பிரேம்ஜி காமெடியனாக நடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

வில்லனாக அறிமுகமாகி மாஸ் ஹீரோவாக மாறிய முன்னணி ஹீரோக்களின் லிஸ்ட் இதோ!

இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களிடம் பிரேம்ஜி இந்த படத்தில் நடிக்க கூடாது என தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் மற்றும் பாடகர் ஆன பிரேம்ஜி அஜித் அவர்களின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். மேலும் அவர் அஜித் உடன் இணைந்து மங்காத்தா படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்த தகவலை மனதில் வைத்து தான் விஜய், பிரேம்ஜியிடம் நீ அவங்க ஆளு எனக்கு தெரியும் அதனால் என் படத்தில் நடிக்க கூடாது என்று விளையாட்டாக கூறியுள்ளார். அதற்கு பதிலாக படத்தில் இசையமைக்க வாய்ப்பு தருவதாக விஜய் கூறியிருந்தார். அதை அறிந்த பிரேம்ஜி அண்ணா உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு மிகப்பெரிய கனவு நடிக்க வாய்ப்பு தருமாறு விஜய் இடம் கெஞ்சியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...