வில்லனாக அறிமுகமாகி மாஸ் ஹீரோவாக மாறிய முன்னணி ஹீரோக்களின் லிஸ்ட் இதோ!

பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஹீரோ கதாப்பாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் சிறப்பானதாக அமைந்துவிட்டால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். மேலும் அந்த திரைப்படத்தை பின் நாட்களில் நினைத்து பார்க்கும் போது, அப்படம் பற்றி முதலில் நினைவுக்கு வருவது அதில் நடித்த வில்லனின் அரக்க குணமும், ஆக்ரோஷமான முகமும் தான்.

அதிலும் நமக்கு நன்கு பரீட்சையமான பல ஆண்டுகளாக நாம் பார்த்து ரசித்த ஹீரோக்கள் ஆழமான அழுத்தமான வில்லன் கேரக்டர்களில் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவதும் சிறப்பு தான். ஆனால் அப்படி வில்லன் கேரக்டரில் நடிப்பதற்கு ஒரு ஹீரோவான ஒரு நடிகருக்கு அசாத்திய தைரியம் தேவை. ஏனென்றால் ஒரு ஹீரோ எவ்வளவு சிறப்பாக அந்த வில்லன் கேரக்டர்களை செய்தாலும் அதனால் தனது ஹீரோ மார்க்கெட் உடைய தான் அதிக வாய்ப்பு உள்ளது.

அப்படி வில்லன் கேரக்டர்களில் நடிக்கும் பல ஹீரோக்கள் பெரும்பாலும் தனது உச்சகட்ட ஹீரோ மார்க்கெட்டை இழந்துவிட்ட பிறகு தான் வேறு வழி இன்றி வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்கள். அதிலும் சில ஹீரோக்கள் தன்னுடைய ஹீரோ மார்க்கெட் இழந்து விடக்கூடாது என்பதற்காகவே தான் ஹீரோவாக நடிக்கும் அதே படத்திலேயே வில்லனாக நடித்து புகழ் பெற்றிருப்பார்கள். சில ஹீரோக்கள் அதிக சம்பளம் மற்றும் தயாரிப்பாளரிடம் அடுத்த படம் பெறுவதற்காக வில்லனாக நடிப்பார்கள்.

ஆனால் ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே வில்லன் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து அதில் தான் நடித்தால் மட்டுமே கேரக்டர் மிகச் சிறப்பாக அமையும் என்பதை உணர்ந்து தான் ஹீரோ அந்தஸ்த்தில் இருக்கும் போதே மற்ற ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து பெரும் புகழ் அடைவார்கள். இன்னும் சில ஹீரோக்கள் வில்லனாக நடித்தால் தன் மார்க்கெட் இழந்து விடுவோம் என்பதற்காக ஹீரோ கதை இல்லாத படங்களில் வில்லனாக நடிப்பார்கள்.

ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்து பின்பு வில்லனாக மாறி படங்களில் நடிப்பது மிகவும் எளிமையான விசயம். ஆனால் ஒரு நடிகன் வில்லனா அறிமுகம் ஆகி வில்லனா இருக்கும்போதே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து முன்னணி ஹீரோக்கும் வில்லனாகி அப்புறம்தான் ஒரு பெரிய ஹீரோவாக மாறுவது பெரிய விசயம்.

நயன்தாரா படத்தில் ஹீரோயினாகும் திரிஷா!

முகம் பார்க்க பல பலனு கமல்ஹாசன் மாதிரி கலராக இருந்தால் ஹீரோ, கரடு முரடா கொஞ்சம் கருப்பாக யோகி பாபு மாதிரி இருந்தால் அவர்கள் வில்லனாக நடிக்கலாம் என்ற பொதுவான கருத்து நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் இன்றைய சினிமாவில் யோகி பாபு பெரிய ஹீரோவாக வலம் வருவது சாதனை தான்.

இந்த சாதனை எல்லாம் சாத்தியமாக அன்றைக்கே விதை போட்டவர் தான் வில்லன் கேரக்டரில் அறிமுகமாகி பின்னாளில் உலக ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் ரஜினிகாந்த். அவர் அறிமுகமாக சில படங்களில் வில்லனாக நடித்து வந்துள்ளார். மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், காயத்திரி பைரவி, அலாவுதீன் அற்புத விளக்கும் போன்ற படங்களில் வில்லனாக தோன்றி அனைவரையும் ரசிக்க வைத்தார்.

கமல்ஹாசன், ஜெய்சங்கர், விஜயகுமார் ஆகியோருக்கு ரஜினி வில்லனாக நடித்துள்ளார். ஆனாலும் வில்லனாக இருக்கும் போதே ஹீரோக்களை விட அதிகமாக ரசிகர்களை வசிகரித்தார். காயத்திரி படத்தில் ஜெய்சங்கரை விடவும் ,16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனை விடவும், மாங்குடி மைனர் படத்தில் விஜயகுமாரை விடவும், நான் வாழவைப்பேன் படத்தில் சிவாஜி கணேசன் விடவும் ரசிகர்களின் அதிக கவனம் பெற்றவர் நடிகர் ரஜினி.

முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்த ரஜினிகாந்த் சில நாட்களில் அவர்களுடன் போட்டி போட்டு நடிக்கும் நடிகனாக மாறி, இன்றளவும் தமிழ் சினிமாவில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவரை தொடர்ந்து வில்லனாக அறிமுகமாகி ஹீரோவானவர் நடிகர் விஜயகாந்த். இவர் இனிக்கும் இளமை படத்தின் மூலமாக நடிகர் சுதாகருக்கு வில்லனாக அறிமுகமாகி பின் தன்னை ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்திக்கொண்டார். இனிக்கும் இளமை, நூல் இருந்த பட்டம், ஓம் சக்தி, பார்வையின் மறுபக்கம், ராமன் ஸ்ரீராமன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். சுதாகர், ஜெய்சங்கர், சிவச்சந்திரன் ஆகியோர் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

மூன்றாவதாக வில்லனாகி ஹீரோவானவர் நடிகர் சத்யராஜ். இவர் முதல் மரியாதை, மூன்று முகம், நூறாவது நாள், 24 மணி நேரம், ஜனவரி 1 ,அண்ணி, காக்கிச்சட்டை, விக்ரம், நான் மகான் அல்ல, நான் சிகப்பு மனிதன், பகல் நிலவு போன்ற படங்களில் வில்லனாக நடித்து திரையை கலக்கினார். இவர் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் இருவரின் படங்களில் வில்லனாக நடித்து பின் ஹீரோவானவர். மேலும் அப்போதைய நட்சத்திரமான கமல்ஹாசன், சிவாஜி, பிரபு, கார்த்திக், முரளி, மோகன். ஜெய்சங்கர் ஆகியோருக்கும் வில்லனாக நடித்துள்ளார்.

நான்காவதாக வில்லனாகி ஹீரோவானவர் நடிகர் சரத்குமார். இவர் புலன் விசாரணை, ஜெகதல பிரதாபன், சந்தன காட்சி, உறுதிமொழி, ராஜகைய வச்சா ,வெற்றிப்படிகள், மீரா, வசந்தகால பறவைகள், பொதுமனிதன். புதுப்பாடகன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மிரட்டினார். வில்லனாகி ஹீரோவான சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் படங்களில் வில்லனாக நடித்து பின் ஹீரோவானவர்.
இவர் அப்போதைய நட்சத்திரமான விக்ரம், பிரபு, மோகன், ராம்கி, ரமேஷ் ஆகியோருக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இவர்களுக்கு பின் ஐந்தாவதாக வில்லனாகி ஹீரோவானவர் நடிகர் நெப்போலியன். இவர் புது நெல்லு புது நாத்து, சின்னத்தாயி, எஜமான், பரதன், பங்காளி, ஊர் மரியாதை, இது நம்ம பூமி ,எங்க முதலாளி, மறவன், கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் வில்லனாக இருந்து ஹீரோவான சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் ஆகியோர் படங்களில் வில்லனாக நடித்து பின் ஹீரோவானார்.

மேலும் நெப்போலியன் கார்த்திக், பிரபு, விக்னேஷ் ஆகியோருக்கும் வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஒரு படங்களில் வில்லனாக நடித்த ஹீரோக்களும் உண்டு. பாக்கியராஜ் தனது இரண்டாவது படமான கன்னிப்பருவத்திலே படத்திலும், பார்த்திபன் தனது முதல் படமான புதிய பாதை படத்திலும், ஜீவன் தனது இரண்டாவது படமான காக்க காக்க படத்திலும் வில்லனாக நடித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...