தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.
தொடர்ந்து 1990களில் தனது 18 வது வயதில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய். ஆரம்பத்தில் குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக ஆனார் விஜய். 2010 காலகட்டத்திற்கு பிறகு விஜய் நடித்து வெளிவந்தாலே அந்த படம் ஹிட்டுதான் என்ற அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார் விஜய்.
தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்த போதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய விஜய் அரசியலில் இறங்கபோவதாக கூறி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தான் இறுதியாக கமிட்டான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப்போவதாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்துக் கொண்டே தற்போது பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் விஜயின் தொண்டர்கள் அவரை இளைய காமராஜர் என்று அழைத்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக விஜய் நான் இளைய காமராஜர் கிடையாது அப்படி அழைக்காதீர்கள் அது மட்டுமில்லாமல் 2026 தேர்தலை பற்றி எதுவுமே இப்போது பேச வேண்டாம் என்று தனது தொண்டர்களுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார் விஜய்.