ரசிகர் மன்ற நிர்வாகிகளை கடிதம் மூலம் ஊக்கப்படுத்திய விஜய்! என்ன மனசு சார் அவருக்கு…

Published:

தனது பிறந்த நாளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்த விஜய் மக்கள் மன்றம் நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சினிமாவிலும், நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது அரசியல் ரீதியிலான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் விஜய் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி செய்து வருகிறார்.

சமீபத்தில் மாநில அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகையை வழங்கினார். இது தவிர விஜய் பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது .

தனது பிறந்த நாளை ஒட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தனது ரசிகர்களுக்கு விஜய் தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊடகம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தேன் என்றும், உங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

லியோ படம் குறித்து மாஸ் அப்டேட் வெளியிட்ட இயக்குனர்! அதுக்குன்னு இவ்வளோ ஓபனாவா…

விஜய் கைப்பட எழுதிய இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களை பாராட்டி ஊக்கப்படுத்திய விஜய்க்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...