ஆட்டம்னா ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம்… பேண்டே கிழிஞ்சிடுச்சு…! வேற லெவல் தளபதி

Published:

தளபதி விஜய் எப்போதும் ஆட்டத்தில் பின்னிப் பெடல் எடுப்பார் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். அந்த வகையில் அவர் சூட்டிங்கில் நடந்த சுவையான அனுபவங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

தளபதி விஜய் எப்பவுமே சூட்டிங் ஸ்பாட்டுக்கு முன்னாடி டான்ஸ்க்கு ரிகர்சல் எடுக்க மாட்டாராம். மாஸ்டரை ஸ்டெப் போடச் சொல்லி ஒரு தடவை பார்த்து விட்டு ஓகே சூட்டிங் போகலாம்னு சொல்லிடுவாராம்.

ஷாட்டுக்கு போனதும் ஒரே டேக்கில் முடிச்சிடுவாராம். அவ்ளோ திறமை தளபதிக்கு இருக்குன்னா ரொம்பவே ஆச்சரியமான விஷயம் தான். நடிகை சமந்தாவே இந்த விஷயத்தை சொல்லிருக்காங்க.

Vijay 2
Vijay 2

ஒரு தடவை போக்கிரி படத்தில ஒரு பாடல் காட்சிக்கு சூட்டிங் நடந்த போது தளபதி விஜய்க்கு பயங்கரமான காய்ச்சல். ஆனா அவர் யாரிடமும் இதுபற்றி சொல்லாமல் எப்பவும் போல சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்காரு. டைரக்டர் பிரபுதேவாவும் சூட்டிங் ஸ்டார்ட் பண்ணிரலாமான்னு தளபதி விஜய்க்கிட்ட கேட்டு ஸ்டார்ட் பண்ணிருக்காரு.

பாடல் காட்சியில் சூட்டிங் நடக்கும் போது ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதுக்குப் பிறகும் விஜய் கேரவனுக்குப் பின்னாடி போய்ட்டு போயிட்டு வந்துருக்காரு. இது அங்க இருந்த எல்லாருக்கும் சந்தேகமா இருந்துச்சு. எதுக்கு இவரு கேரவனுக்கு உள்ளே போகாம பின்னாடி பின்னாடி போயிட்டு வாராருன்னு.

Vijay 3
Vijay 3

கேரவனுக்கு உள்ளே போனாலும் ரெஸ்ட் எடுக்க அல்லது ரெப்ரஷ் ஆக போறாருன்னு நினைக்கலாம். அப்போ ஒர்க் பண்ண எல்கேஜி படத்தோட டைரக்டர் கே.ஆர்.பிரபு வந்து தளபதி பின்னாடியே போயி பார்த்துருக்காரு. பார்த்ததும் அவருக்கு பயங்கர அதிர்ச்சி. தளபதி விஜய் வாந்தி எடுத்துருக்காரு. இந்த விஷயத்தை கே.ஆர்.பிரபுவே ஒரு தடவை சொல்லிருக்காரு.

இதே மாதிரி சுறா படத்துல வர்ற நான் நடந்தால் அதிரடி பாடலுக்கு சூட்டிங் நடந்துச்சு. அது வெளிநாட்டுல நடந்தது. அப்போ ராபர்ட் மாஸ்டர் தான் கோரியாகிராபர். அவர் பாட்டுன்னாலே ஆட்டம் அதிரடியாத் தான் இருக்கும். மூவ்மெண்ட்ஸ் எல்லாம் பார்க்கும்போது ரொம்ப டஃப்பா இருக்கும்.

Vijay
Vijay

அப்படி ஒரு மூவ்மெண்ட்ட விஜய் ஆடும்போது அவரோட பேண்ட் கால் முட்டி அருகில் கிழிந்து விட்டது. உடனே தளபதி காமெடியா சொன்னாராம். இனிமே ராபர்ட் மாஸ்டர் கோரியோகிராபின்னா நாலு பேண்ட் சேர்த்து எடுத்துட்டு வாங்கடான்னு ஜாலியா சொன்னாராம்.

தளபதி விஜய் ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதுக்கு அப்புறம் ஷாட் எப்படி வந்துருக்குன்னு மானிட்டர்ல பார்ப்பாரு. அதே மாதிரி இந்த பாடல் காட்சிக்கு இடையிலேயும் அப்படி கீ போர்ட தட்டி பார்த்துருக்காரு. அப்போ கீ போர்டுல ஃபுல்லா ரத்தம்.. என்னன்னு கேட்டா ஒண்ணும் இல்லன்னு அடுத்த ஷாட்டுக்கு ரெடியாயிட்டாராம் தளபதி.

 

 

மேலும் உங்களுக்காக...