அல்டிமேட் ஸ்டாரின் விடாமுயற்சி இந்த சென்டர்களில் சக்கை போடு போடுமா?

By Sankar Velu

Published:

மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்தப் படமானது அஜீத்குமாருக்கு கடைசியாக வெளிவந்த சூப்பர்ஹிட் படம் துணிவு. தல ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்று வெற்றி வாகை சூடியது.

இதனால் அடுத்து வெளியாக உள்ள 62வது படத்திற்கும் அதுதான் விடாமுயற்சி.

MT1
MT1

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அந்த வகையில் படத்தின் பிரதான வெற்றிக்குக் காரணம் இயக்குனர் தான். விடாமுயற்சிக்கு இயக்குனர் மகிழ் திருமேனி. இவரது படம் வெற்றி வாகை சூடுமா என்பதை இவர் இயக்கிய மற்ற படங்களைப் பார்த்து தெரிந்து கொள்வோம்.

தடையற தாக்க

2012ல் வெளியான படம். அருண் விஜய், மம்தா மோகன் தாஸ், ராகுல் பிரீத் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். இதுதான் இயக்குனர் மகிழ்திருமேனியின் முதல் படம். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். அருண் விஜய் நடித்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்றால் மிகையில்லை.

மீகாமன்

Mgmn
Mgmn

2014ல் வெளியான படம். ஆர்யா, ஹன்சிகா மோத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். 2022ல் வெளியான லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தைப் போல இருக்கும்.

போதைக்கும்பல் மற்றும் மாபியாவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை. பலவித டுவிஸ்டுகளடன் ஆக்ஷன் காட்சிகளும் சேர்ந்து படத்தை ரசிக்க வைத்தன. ஆவரேஜான வெற்றி என்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானது.

தடம்

2019ல் வெளியானது. அருண் விஜய்க்கு இது ஒரு சிறந்த த்ரில்லர் படம். கதை, திரைக்கதை படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலம். இயக்குனர் மகிழ் திருமேனியின் சிறந்த படம் இதுதான்.

கலக தலைவன்

KT
KT

2022ல் வெளியான படம். உதயநிதி ஸ்டாலின், நித்தி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர். இதுவும் சுமாரான வெற்றியைத் தந்த படம் தான். இந்தப் படத்தின் கதை சூப்பர். முதல் பாதி விறுவிறுப்பு. 2வது பாதி சீக்கிரமாக முடிந்தது போல உள்ளது.

கார்த்தி, அருண் விஜய் போன்ற நடிகர்கள் நடித்தாலும் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகத் தான் அமையும். இவரது படங்கள் பெரும்பாலும் ஏ மற்றும் பி சென்டர்களில் சக்கை போடு போடுகின்றன. சி சென்டரில் அந்த அளவு ரீச்சாகவில்லை.

விடாமுயற்சி படமும் த்ரில்லர் கலந்த ஆக்ஷன் படம் தான். அதுவும் அல்டிமேட் ஸ்டார் என்பதால் படத்திற்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட். அதனால் வெற்றிக்கான வாய்ப்புகள் ஏராளம்.

மேலும் உங்களுக்காக...