50 ஓவர் கிரிக்கெட்டே பொறுமையை இழந்து 20 ஒவர் போட்டியாக மாறிவிட்டது. 2.30 மணி நேரம் ஓடும் படங்களை இன்று பொறுமையாக உட்கார்ந்து பார்க்க ஆளில்லை. அப்படியே படங்களை எடுத்தாலும் அதனை பார்ட் 1,2 என பிரித்து விடுகின்றனர். இல்லாவிடில் 1.30 மணி நேரத்தில் ஹாலிவுட் படங்களைப் போல எடுக்க ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் மக்களின் ரசனை இந்தத் தலைமுறைக்கு ஏற்றாற் போல் மாறிவிட்டது.
ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு படம் சுமார் 3.45 மணி நேரம் ஓடி மகத்தான சாதனை வெற்றி அடைந்தது என்றால் நம்ப முடிகிறதா? அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்த நாடோடி மன்னன் திரைப்படம் தான். 10 பாடல்களுடன் சுமார் 3.45 மணி நேரம் விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்தது.
இது இல்லாமல் வெளியே தலை காட்டாத எம்.ஜி.ஆர். வெள்ளை தொப்பி ரகசியம் இதானா?
இந்தப் படம் மூலமாகத்தான் எம்.ஜி.ஆருக்கு எண்ணற்ற ரசிகர் பட்டாளம் உருவாகினர். 1958 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடி மன்னன் திரைப்படம் தான் இன்று வரை மிகவும் நீளமான திரைப்படமாக இருக்கிறது. இதுவரை அந்த படத்தின் சாதனையை வேறு எந்த திரைப்படமும் முறியடித்தது கிடையாது. எம்ஜிஆரே இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார்.
இப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து பிஎஸ் வீரப்பா, எம் என் நம்பியார், பானுமதி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். மிகப்பெரும் வரவேற்பை பெற்ற அந்த திரைப்படம் வசூலிலும் பல சாதனை படைத்தது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கை நிறைய வசூலை அள்ளியது.
அப்போதைய கால சினிமாவை எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு ஜாம்பவான்கள் தான் ஆட்சி செய்தனர். அதில் நடிகர் திலகம் சிவாஜிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆனால் எம்ஜிஆர் தன்னுடைய சொந்த திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களையும் தன் பக்கம் வரவழைத்தார். அப்படி பலராலும் ரசிக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும்படி எடுக்கப்பட்டிருந்தது.
அப்போது வந்த திரைப்படங்களிலேயே அதிக நேரம் ஓடக்கூடிய திரைப்படமாகவும் இது இருந்தது அவ்வளவு ஏன் இந்த திரைப்பட சாதனையை இன்று வரை அது யாரும் முறியடிக்கவில்லை. அந்த வகையில் எம்ஜிஆரின் இந்த நாடோடி மன்னன் திரைப்படம் தான் தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக நீளம் கொண்ட திரைப்படமாக இப்போது வரை இருக்கிறது. இதற்கு அடுத்ததாக ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, சம்பூர்ண இராமாயணம் போன்ற படங்கள் உள்ளன.