பிரேம்ஜி அமரன் பிரபல இசை குடும்பத்தில் இருந்து வந்ததால் ஆரம்பத்தில் பின்னனி பாடகராகவும் உதவி இசை அமைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். பின்னர் இவரது சகோதரர் வெங்கட் பிரபுவின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
சந்திரமுகி திரைப்படத்தில் பிரபு பேசிய வசனம் ஒன்று “என்ன கொடுமை சார் இது..?” மற்றும் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் விஜய் பேசிய “எவ்வளவு பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா” போன்ற வசனங்களை பேசி மக்களிடையே வரவேற்பு பெற்றவர்.
இந்தக் கதை கார்த்திக்கு எழுதினது இல்லை..! மனம் திறந்த பிரபல இயக்குனர்..?
இசையமைப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் காமெடி நடிகர் இதனை தவிர்த்து இவர் ஒரு இயக்குனராகவும் இருந்திருக்கிறார். இவரின் சகோதரரான வெங்கட் பிரபுவை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் அமைந்து அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுதந்தது.
அதனைத் தொடர்ந்து கஸ்டடி திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளும் வெளியானது. இதனை அடுத்து பம்பர் ஆஃபர் ஆக தளபதி விஜய்யின் 68வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைய உள்ளது.
18 வயதில் கொடிகட்டி பறந்த நடிகை திவ்யபாரதி.. 19 வயதில் மர்ம மரணம்.. என்ன நடந்தது?
இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மாஸ் படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் வெங்கட் பிரபு ஆரம்ப காலத்தில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். முதலில் சினிமாவில் ஹீரோவாக தான் நடிக்க வந்தார். அதற்குப் பின் சூழ்நிலையினால் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறிவிட்டார். பிரேம்ஜிக்கு படம் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் அவரது சகோதரர் வெங்கட் பிரபுவை வைத்து குறும்படங்களை இயக்கத் தொடங்கினார்.
இதற்குக் காரணமாக அமைந்தவர் இவரது மற்றொரு சகோதரரான கார்த்திக் ராஜா. இவரும் அதிகளவில் படங்களை இயக்கும் ஆர்வம் கொண்டவர். அதனாலே கார்த்திக் ராஜா இயக்கும் அனைத்து குறும்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார் வெங்கட் பிரபு. இவரைத் தொடர்ந்து பிரேம்ஜி அமரனும் இயக்குனராக அவதாரம் எடுத்து வெங்கட் பிரபு ஹீரோவாக வைத்து வான்டட் என்னும் திரைப்படம் ஒன்றை இயக்கியதாகவும், ஒரு சில காரணங்களால் அந்த படத்தை வெளியிடவில்லை என பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
திருமணமே வேண்டாம் என்று இருந்த மாதவி.. சாமியார் கை காட்டியவரை திடீரென திருமணம் செய்த அதிசயம்..!