நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்; கண்ணீர் விட்டு கதறும் உறவுகள்!

Published:

வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. மதுரையைச் சேர்ந்த வடிவேலு சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் தங்கியிருந்தாலும், அவரது குடும்பத்தினர் இன்னமும் மதுரையில் தான் வசித்து வருகின்றனர்.

வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி மதுரை விரகானூரில் வசித்து வந்தார். 87 வயதான அவருக்கு நேற்று இரவு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...