மல்யுத்த வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் ரத்து!! விளக்கம் அளிக்க ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு;

Published:

நம் இந்தியாவில் நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையானது மேம்பட்டு கொண்டே வருகிறது. விளையாட்டு வீரர்களை எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்து அவர்களின் திறன் மேம்படுத்தப்படுகிறதோ அதைப்போல் வீராங்கனைகளும் கண்ணோட்டமிட்டு அவர்களின் திறனும் நாளுக்கு நாள் வளர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது விளையாட்டு வீராங்கனைகளுக்கு அந்தத் துறையின் சார்பில் உள்ளவர்களே பாலியல் வன்கொடுமை செய்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு உள்ளது ஒன்றிய விளையாட்டு அமைச்சகம். அதன்படி வீராங்கனைகள் பாலியல் புகார் தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பிடம் விளக்கம் கேட்டுள்ளது.

72 மணி நேரத்திற்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த சங்க தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனை வினோஜ் போகத் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

பயிற்சிக்கு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு சங்கத் தலைவர் பிரிஜ் பூசன் பாலியல் தொல்லை கொடுப்பதாக  புகார் வைத்துள்ளார். இந்திய மல்யுத்த சங்கத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க கோரி வீரர் வீராங்கனைகள் டெல்லியில் போராடிக் கொண்டு வருகின்றனர்.

பிரிஜ் பூசன் சரண்சிங் மீது புகார் கூறியதால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வீராங்கனை வினோஜ் போகத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர் வீராங்கனைகளும் மல்யுத்த சங்கத் தலைவருக்கு எதிரான போராட்டம் நடத்திக் கொண்டு வருகின்றனர்.

பாலியல் புகார் எதிரொலியை அடுத்து லக்னோவில் மல்யுத்த வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் மல்யுத்தம் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்க இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...