ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக எடுத்த அதிரடி முடிவும், பாஜக கொடுக்கும் பதிலடியும்!

Published:

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த சில நாட்களுக்கு முன்னால் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.

திரிஉரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநில தேர்தலுடன் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.

annamalaiஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக திமுக பாஜக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை மீண்டும் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

edappadi palanisamy2 20 1487592502

இந்த நிலையில் திடீரென பாஜக தேர்தல் குழு ஒன்றை அமைத்தது. அண்ணாமலை அமைத்த 14 உறுப்பினர்கள் குழு தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தலை பொருத்தவரை ஆளுங்கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலையில் இரண்டாவது இடம் யாருக்கு என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

அண்ணாமலை நிறுத்தும் பாஜக வேட்பாளர் இரண்டாவது இடத்தை பெற்று விட்டால் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிடம் அதிக தொகுதிகளை வாங்கலாம் என்ற திட்டம் இருப்பதாக தெரிகிறது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக வெற்றி பெறுமா அல்லது இரண்டாவது இடத்தை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...