நடிகை வடிவுக்கரசி ரஜினியின் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென பாதியில் படப்பிடிப்பிலிருந்து ஓடி வந்து விட்டதாகவும் அதன் பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ததாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் தனக்கு மிகவும் நெருங்கிய தோழியாக ஸ்ரீப்ரியா இருந்தார் என்றும் அவர்தான் என்னை காப்பாற்றினார் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கதாநாயகி, குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை வடிவுக்கரசி. சென்னையை சேர்ந்த இவர் பழம்பெரும் இயக்குனர் ஏ.பி.நாகராஜனின் நெருங்கிய உறவினராவார்.
தண்ணீர் பிரச்சனையை தைரியமாக சொன்ன ஒரே இயக்குனர்.. ‘தண்ணீர் தண்ணீர்’ உருவான கதை..!
பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்த வடிவுக்கரசி குடும்ப சூழ்நிலை காரணமாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருந்தார். அப்போதுதான் அவர் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்தார். 1978ஆம் ஆண்டு சிகப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தை அடுத்து கன்னிப்பருவத்திலே என்ற திரைப்படத்தில் முதல் முறையாக நாயகியாக நடித்தார். அந்த படத்தில் அவரின் கணவராக ராஜேஷ் நடித்திருபார். ஒரு விபத்தில் அவருக்கு ஆண்மை பறி போனவுடன் அவரால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்பதாகவும் அதை தெரிந்து கொண்ட பாக்யராஜ் வடிவுக்கரசியை அடைய மிரட்டுவதாகவும் கதை செல்லும்.
இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வடிவுக்கரசிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனை அடுத்து ஏணிப்படிகள், தெய்வீக ராகங்கள், கண்ணில் தெரியும் கதைகள், ஆயிரம் வாசல் இதயம் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில்தான் ரஜினியின் ராணுவ வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்க வடிவுக்கரசிக்கு வாய்ப்பு கிடைத்தது. ரஜினியின் தங்கையாகவும் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் அந்த படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரஜினியை துப்பாக்கியால் சுட வேண்டும் என்ற காட்சி படமாக்கப்பட்ட போது எனக்கு துப்பாக்கி என்றால் பயம், அதை என்னால் கையிலே பிடிக்க முடியாது என்று கூறிவிட்டு பட குழுவினர்களுடன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் படக்குழுவினர் கடும் ஆத்திரம் அடைந்தாலும் ரஜினி அவர் மீது எந்த விதமான வருத்தமும் அடையவில்லை என்றும் அது அவரது பெரிய மனது என்றும் வடிவுக்கரசி பேட்டியில் கூறியுள்ளார்
ஒரு கட்டத்தில் மன அழுத்தம் காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் அதைக் கேள்விப்பட்டு ஸ்ரீபிரியா உடனடியாக வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியதாகவும் இரண்டு நாள் முழுவதும் தனது அருகில் மருத்துவமனையில் இருந்து தன்னை கவனித்துக் கொண்டதாகவும் வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீபிரியாவும் தானும் ஒரு சீரியலை தயாரித்தோம் என்றும் விடுதலை என்ற அந்த சீரியல் நல்ல வரவேற்பு பெற்றது என்றும் சன் டிவியில் ஒளிபரப்பானது என்றும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வடிவுக்கரசியின் திரை உலக வாழ்க்கையில் முக்கியமான படம் என்றால் அது முதல் மரியாதை தான். சிவாஜியை குறை கூறிக்கொண்டே திட்டிக் கொண்டே இருக்கும் கேரக்டர் என்றாலும் அந்த கேரக்டர் தனக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது என்றும் கூறியுள்ளார்.
தடைகளை தகர்த்து சாதனை செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’: எம்ஜிஆரின் அரசியலுக்கு அடித்தளம்..!
கொடூரமான வில்லி வேடத்திலும், அமைதியான அம்மா வேடத்திலும், அக்கா, அண்ணி என பல்வேறு குணசித்திர கேரக்டர்களிலும் வடிவுக்கரசி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தில்கூட அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், 0கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஒருசில திரைப்படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார்.
மேலும் திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைய தொடங்கியபோது அவர் டிவி சீரியலில் நடித்தார். முதல் முறையாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மீன் என்ற சீரியலில் நடித்த அவர் அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான குடும்பம், அலைகள், சக்தி உள்பட பல சீரியல்கள் நடித்தார்.
எம்ஜிஆரால் நஷ்டமடைந்தாரா நடிகர் அசோகன்? பல வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி..!
தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா, ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார். நடிகை வடிவுக்கரசிக்கு தற்போது 65 வயது ஆகிற போதிலும் இன்னும் அவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.