மேக்கப் அணிந்து வெளியில் போறீங்களா அப்போ வீட்டுக்கு வந்ததும் இதை செய்ய மறந்திடாதீங்க!

By Sowmiya

Published:

மேக்கப் ஒருவரை எவ்வளவு தூரம் அழகாக காட்டுகிறதோ அதே மேக்கப்பை நாம் சரியாக கையாளாமல் விட்டால் பல சரும பிரச்சனைகளை உண்டாகிவிடும். மேக்கப்பை கையாள்வதில் மிக முக்கியமான பகுதி மேக்கப்பை நீக்குவது.

ஆம்! ஒவ்வொருவரும் உறங்கச் செல்வதற்கு முன்பு எவ்வளவு சோர்வாக இருந்தாலும் சரி மேக்கப் அணிந்தபடியே உறங்கி விடக் கூடாது. முகத்தில் உள்ள ஒப்பனையை முறையாக அகற்றிவிட்டு தான் உறங்க வேண்டும்.

makeup remove

முகத்தில் பல்வேறு விதமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தி இருப்போம். அவை அனைத்தையும் முறையாக அகற்றி சருமத்தை காற்றோட்டமாக வைத்திருத்தல் அவசியம். இரவு நீண்ட நேரம் மேக்கப் முகத்தில் இருப்பதால் கண்களை சுற்றி கருவளையம் உண்டாகும்.

கண்களை சுற்றி கருவளையமா? கவலை வேண்டாம்.. இந்த 8 டிப்ஸ்களை செய்து பாருங்க.. கருவளையம் இருந்த தடம் இல்லாம மறைந்து போயிடும்…!

மேக்கப் அணிந்து வெளியில் சென்று வரும் பொழுது அந்த மேக்கப்பின் மேல் சுற்றுச்சூழலில் உள்ள மாசுக்கள், தூசிகள், வியர்வை போன்றவை படிந்து தேங்கி இருக்கும் மாசுக்களால் முகப்பருக்கள் போன்ற சருமப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

உறங்கச் செல்லும் முன்பு மேக்கப்பை நீக்கி முகத்தை காற்றோட்டத்தோடு வைத்திருந்தால் தான் மறுநாள் காலையில் சருமம் அந்த நாளுக்கு தயாராக பொலிவுடன் இருக்கும்.

மேக்கப்பை நீக்குவதற்கு என்றே சந்தைகளில் பல்வேறு வைப்ஸ்கள்,  கிளன்சர்கள்,  வாட்டர்கள் போன்ற பல மேக்கப் ரிமூவர்கள் கிடைக்கின்றன. ஆனால் இவை ஏதும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் முகத்தில் உள்ள ஒப்பனையை நீக்குவதோடு சருமத்தையும் பராமரிக்கும் சில வழிமுறைகளை பார்க்கலாம்.

makeup remover

1. தேன்

ஒரு ஸ்பூன் தேனினை எடுத்து முகம் முழுவதும் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி விடலாம். இந்தத் தேனை முகத்தில் தடவுவதால் மேக்கப் நீக்குவதோடு பொலிவான சருமத்தையும் பெற முடியும். தேனில் உள்ள ஆன்ட்டிபயாட்டிக் பரு ஏற்படாமல் காக்கும்.

2. விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில்:

அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் மீது நல்ல மசாஜ் செய்து சில நிமிடங்கள் விட்டு விடலாம்.

இப்பொழுது ஒரு பருத்தி துணியினை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து முகத்தின் மீது சிறிது நேரம் வைக்க வேண்டும். பின்பு மெதுவாக துடைத்து எடுத்து விடலாம்.

இது வறண்ட சருமம் உடையவர்களுக்கு சிறப்பான முறையாகும். மேலும் சருமத்தில் உள்ள தேவையற்ற கூடுதல் எண்ணெயை இது நீக்கிடும்.

makeup remove1

3. ஜோஜோபா ஆயில் மற்றும் ரோஸ் வாட்டர்:

ஒரு ஸ்பூன் ஜோஜாபா ஆயில் மற்றும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் நன்கு மசாஜ் செய்து சில நிமிடங்கள் கழித்து பருத்தி துணியாய் துடைத்து விடலாம்.

ஜோரான ஜோஜோபா எண்ணெய்… சருமம், கூந்தல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு!

ஜோஜோபா ஆயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தது தோலில் அலர்ஜியை உண்டாக்காதது மேலும் இதனுடன் ரோஸ் வாட்டர் சேரும்போது சருமம் மிருதுவடைகிறது, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

4. தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த ஒப்பனை நீக்கி. இது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவி புரியும். தேங்காய் எண்ணெயில் சருமத்திற்கு பலவிதமான நன்மைகள் உள்ளன. சருமத்தில் தொற்றுக்கள் ஏதும் ஏற்படாமல் இது பாதுகாக்கும். தேங்காய் எண்ணெயை முகம் முழுவதும் நன்கு மசாஜ் செய்து பின் கழுவி விடலாம். 

எப்பொழுதும் மேக்கப்பை நீக்கும் பொழுது கண்களில் கூடுதல் கவனம் வேண்டும். கண்கள் ஒப்பனையில் இமைகள், இமை முடிகள், கண்களின் கீழ் பகுதி போன்றவற்றில் பயன்படுத்தி இருக்கும் அனைத்து விதமான மைகளும் முழுமையாக நீக்கப்பட்டிருப்பது அவசியம். மேலும் இதுபோன்று இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முகத்தில் உள்ள மேக்கப்பை நீக்கி அதன்பின்  உறங்கச் செல்லலாம் இதனால் சருமமும் பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் உங்களுக்காக...