வைரமுத்துவை கமலுக்காக எழுதிய பாட்டில் கலாய்த்த வாலி.. தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா..

Published:

திரை உலகம் என்றாலே இரண்டு நடிகர்களும் அல்லது ஒரே துறையில் இருக்கும் வெவ்வேறு ஆட்களுக்கு ஒரு விதமான போட்டியோ மறைமுகமான ஜாலியான சீண்டலோ இருந்து கொண்டே தான் இருக்கும். என்ன தான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் திரைப்படங்கள் அல்லது படைப்புகள் வெளிவரும் போது மிகப்பெரிய அளவில் ஒரு மோதல் இருந்து கொண்டே தான் இருக்கும்.

இதற்கு உதாரணமாக அந்த காலத்தில் எம்ஜிஆர் – சிவாஜி தொடங்கி தற்போது விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் வரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அதே நேரத்தில் இந்த போட்டி ஆரோக்கியமாக இருந்து வருவதால் பிரபலங்களும் கூட பெரிய அளவில் இது பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

இது போன்ற போட்டி நடிகர்களுக்கு மத்தியில் அதிகமாக இருந்து வரும் நிலையில் இயக்குநர்கள், கேமராமேன்கள் என மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இடையே இருப்பது அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் நடிகர்களை தாண்டி இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் என பலருக்கு நடுவே இது போன்ற போட்டி இருந்து வருவது சாதாரண விஷயமாகவும் நிலவி வருகிறது.

ஏ. ஆர். ரஹ்மான் ஒரு காலத்தில் கொடிகட்டி பறக்க தற்போது பல இளசுகளின் பிளே லிஸ்ட்டை ஆக்கிரமித்து வருகிறார் அனிருத். இதனால் ஏ. ஆர். ரஹ்மானை அனிருத் மிஞ்சி விட்டார் என்று பல ரீதியான கருத்துக்களை இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் ரஹ்மான் என்றும் கிங் தான் தான் என்றும் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில் பாடலாசிரியரான ஒருவர் இன்னொரு பாடலாசிரியரை மறைமுகமாக பாடலில் தாக்கியது பற்றி தற்போது பார்க்கலாம். ஒரு காலத்தில் கண்ணதாசன் தனது வரிகளால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்க, அதன் பின்னர் வந்த வாலி, வைரமுத்து, நா. முத்துக்குமார் என பலரும் அதே பணியை மிக சிறப்பாக செய்தனர்.

அப்படி இருக்கையில் தான், வைரமுத்துவை கமல்ஹாசன் படத்தில் வரும் ஒரு பாடலில் மறைமுகமாக வாலி குறிப்பிட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ராஜராஜன் என பாடலாசிரியர்களுக்கு கொடுக்கும் விருது ஒன்று வைரமுத்துவுக்கு பல ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருந்தது. அதன் பின்னர் உருவான தசாவதாரம் என்ற திரைப்படத்தில் ‘கல்லை மட்டும் கண்டால்’ என்ற பாடலை வாலி எழுதியிருப்பார்.
Dhasavatharam Movie Kallai Mattum Kandal Song Meaning

அதில் வரும் ஒரு வரியில், ‘நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன் தான். அந்த ராஜனுக்கே ராஜன் இந்த ரங்கராஜன் தான்’ என வாலி எழுதி இருப்பார். அவரது இயற்பெயர் ரங்கராஜன். அதற்கு முன்பு குறிப்பிட்ட ராஜராஜன் வைரமுத்துவுக்கு கொடுத்த விருதினை குறிப்பிட்டதாகவும் அவரை விட தான் கிங் என குறிப்பிடுவதற்காக தான் ரங்கராஜன் என்ற வரிகளில் வாலி எழுதி இருந்ததாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இன்னொரு பக்கம் படத்தின் கதைக்கேற்ப அந்த வரிகள் இருப்பதாகவும், வாலி எந்த உள் நோக்கத்துடனும் அதை எழுதி இருக்கமாட்டார் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...