சமூக வலைத்தளங்களில் தலைப்பு செய்தியாக வளம் வரும் தேவர் மகன் – மாமன்னன் படம் சர்ச்சை குறித்த அப்டேட் இதோ!

Published:

சமீபத்தில் நடந்த மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படத்தை பற்றி பேசிய பேச்சு இணையத்தில் வைரல் கன்டென்ட் ஆக மாறியுள்ளது.

தேவர் மகன் திரைப்படம் ஒரு வெற்றி திரைப்படம். குறிப்பாக எனக்கும் மனப்பிறழ்வை ஏற்படுத்தியதாக மாரி செல்வராஜ் கருத்து தெரிவித்திருந்தார்.

1992 ல் தீபாவளி அன்று வெளியான படம் தேவர் மகன். தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதை தொடர்ந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் சத்திரியபுத்ருடு என்னும் பெயரில் வெளியாகி அங்கேயும் வெற்றியை பதிவு செய்தது.

கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு அந்த மொழியிலும் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதைவிட கூடுதலா ஹிந்தியில் இராசத் தலைப்பில் அணில் கபூர் நடித்து இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வெளியான அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது . பல பிலிம்ஃபர் அவார்டுகளை குவித்தது இந்த திரைப்படம்.

மேலும் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் தேவர் மகன் என்று கூறும் அளவிற்கு சிறப்புகளை கொண்ட படம் இது. கலை ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஒரு மைல்ஸ்டோனை அடைந்த ஒரு படம் தான் தேவர் மகன்.

இன்றைக்கு இருக்கக்கூடிய பல முன்னணி இயக்குனர்களுக்கு முன்மாதிரியாக அந்த படம் அமைந்துள்ளது. கதை சொல்லும் விதம், திரைக்கதை ரீதியாகவும் அந்த படம் பலருக்கும் ஒரு பாடமாக இருந்துள்ளது. அந்த படத்தின் மீதான பாஸ்டிங் பார்வைகள் இப்படி இருக்க அரசியல், சமூக தளத்தில் அந்த படம் எதிர்கொண்ட எதிர்மறை பார்வைகள் விமர்சனங்களும் அதிகம்.

1993 ஆம் ஆண்டிலிருந்து தென் மாவட்டங்கள் நடைபெற்ற சாதி மோதல்களுக்கு அந்தப்படம் மற்றும் போற்றி பாடடி பொண்ணே அந்த பாடல் பெரும் தூண்டுகோலாக அமைந்தது என பல கருத்துக்கள் வந்தது.

இந்த படம் 1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் கலவரம் என பல கலவரத்திற்கு காரணமாக அமைந்தது என பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இந்த கலவரத்தை மையப்படுத்தி தான் மாரி செல்வராஜ் இதற்கு முன்பாக கர்ணன் படத்தை எடுத்துள்ளார். அந்த படத்தில் முதல் காட்சியில் 1997 திமுக ஆட்சியை காட்டி இருந்தார், அதை தொடர்ந்து விமர்சனம் பார்வை வந்தது. பிறகு 90களில் பிற்பகுதியில் அந்த காட்சி அவர் மாற்றியது நமக்கு நினைவு இருக்கும்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் குறித்து நடிகர் கமல்ஹாசனுக்கு எழுதிய கடிதமும் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது. சாதிய வேல் கம்புக்கு கூர் தீட்டுகிறார் நடிகர் கமலஹாசன், விசேஷ வீடுகளில் போற்றி பாடடி பொண்ணே பாடல் ஒலித்து கிராமங்களின் ஒற்றுமையை குலைக்கிறது.

3 மணி நேரம் மீசை முறுக்கி, அரிவாள் தூக்கி சன்டையிட்டு கடைசி மூன்று நிமிடங்களில் அறிவாளை கீழே போடுங்கடா அப்படி கருத்து சொன்னால் அது எப்படி போய் சேரும் என பல விமர்சனங்களை அவர் முன் வைத்திருந்தார்.

நடிகர் கமலஹாசனும் தேவர் மகன் படம் குறிப்பாக போற்றி பாடடி பெண்ணே அந்த பாடலுக்காக பொது வெளிகளில் பல இடங்களில் மன்னிப்பும் கோரி இருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா, பாடல் ஆசிரியர் வாலி உயிரோடு இல்லை என்றாலும் அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தில் ஹீரோவை மையப்படுத்தி அவரை போற்றுதலுக்குள்ளானவராக காட்ட வேண்டும் தான் எங்களுடைய எண்ணம், ஆனால் இந்த அளவுக்கு அது சமூகத்தில் எதிர் வினையை கொடுக்கும் என எதிர்பார்க்க வில்லை என்று கூறியுள்ளனர்.

ஒரு நல்ல கருத்தை மையப்படுத்தி தான் அந்த படத்தை நாங்கள் எடுத்திருந்தோம் என பலமுறை அவர் விளக்கம் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் செய்யும் தவறால் சரிவின் விழும்பில் இருக்கும் பூமி! அதிர்ச்சி அப்டேட்!

இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார். தேவர் மகன் படத்தின் பெரிய தேவனும் சின்ன தேவனும் இருக்கும் கால கட்டிடத்தில் என் தந்தையை வைத்து பொருத்தி பார்த்து தான் மாமன்னன் படம் இயக்கியதாக கூறியுள்ளார்.

இந்த படத்தின் இசக்கி தான் மாமன்னன். தேவர் மகன் படத்தில் என்னுடைய விசுவாசத்தின் அடையாளமாய் இருந்த இசக்கி இந்த மாமன்னன் படத்தில் எப்படியான ஒரு கதாபாத்திரமாக இருக்க போகிறார் என எதிர்பார்ப்பும் உள்ளது.

தேவர் மகன் படத்தின் மீது இப்படிப்பட்ட விமர்சன பார்வையை முன்வைத்து அந்த படத்தின் தாக்கத்திலிருந்து உருவான இந்த மாமன்னன் படம் என்ன அரசியலை பேசப்போகிறது, அது என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பு எல்லா தரப்பிலும் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை மாமன்னன் படம் எப்படி பூர்த்தி செய்கிறது என பார்க்கலாம்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் வெளியான பிறகு தான் தனக்கும் நடிகர் ஹாசனுக்கும் இடையேயான உரையாடல் முழுமை அடையும் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...