பூவே உனக்காக படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்த விக்ரமன்.. இருந்தும் பாதியில் நின்ற ஷுட்டிங்.. எந்தப் படம் தெரியுமா?

Published:

குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் அறிமுகமான தளபதி விஜய் மீண்டும் தந்தையின் இயக்கத்தில் ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தந்தையின் இயக்கத்திலேயே நடித்து வந்தவருக்கு மிகப்பெரிய  திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்த படம் தான் பூவே உனக்காக. இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விஜய்யின் கேரியரை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிக் கணக்கினை ஆரம்பித்து வைத்து பூவே உனக்காக படம் அவருக்கு பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பினைக் கொடுத்தது. மென்மையான காமெடி கலந்த நடிப்பில் உருவான இந்த திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடிசாதனை படைத்தது. மேலும் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் மனதை வருடின.

அதன்பின் விஜய் கவனமுடன் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து அனைத்திலும் வெற்றி கண்டு தென்னிந்தியாவின் முன்னனி நட்சத்திரமாக உருவெடுத்தார். இந்நிலையில் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர் விக்ரமன் மீண்டும் விஜய்யை வைத்து எடுக்கத் திட்டமிட்ட படம்தான் உன்னை நினைத்து. அப்போது விஜய் முன்னனி அஜீத், பிரசாந்த் போன்றோருக்கு போட்டியாக வளர்ந்து விட்டார்.

இனி நானே நினைச்சாலும் இப்படி ஒரு குத்துப்பாட்டை போட முடியாது.. வித்யாசாகர் சொல்லி அடித்த கில்லி ‘அப்படிப் போடு‘ பாடல்

‘வானத்தைப் போல‘ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் உன்னை நினைத்து படத்திற்காக மீண்டும் விஜய் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் விக்ரமன். மேலும் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் மாற்றங்களைச் செய்யும்படி விஜய் விக்ரமனிடம் கூறியிருக்கிறார். ஆனால் விக்ரமனோ அது முடியாது.. என் மனதில் இருக்கும் கதைப்படியே தான் எடுத்தால் படம் நன்றாக இருக்கும்.

உங்களுக்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றால் என்னால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாது. உங்களுக்காகவே மொத்தப் படத்தையும் மாற்ற வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த கிளைமேக்ஸில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நாம் இதனை விட்டு விடுவோம். நான் வேறொரு ஹீரோவைப் பார்த்துக் கொள்கிறேன். நாம் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்றும் கூறியுள்ளார். இதனைக் கேட்ட விஜய் விக்ரமன் சொன்னது போலவே படத்திலிருந்து விலகி விட்டாராம்.

அதன்பிறகு சூர்யாவை வைத்து விக்ரமன் உன்னை நினைத்து படத்தினை இயக்கி ஹிட் படமாக கொடுத்தார். இந்தத் தகலை சித்ரா லட்சுமணனுடனான தனது பேட்டியில் இயக்குநர் விக்ரமன் பகிர்ந்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...