இனி நானே நினைச்சாலும் இப்படி ஒரு குத்துப்பாட்டை போட முடியாது.. வித்யாசாகர் சொல்லி அடித்த கில்லி ‘அப்படிப் போடு‘ பாடல்

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படான ‘ஒக்கடு‘ படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு உருவான படம் தான் கில்லி. கடந்த 2004-ல் வெளியான இந்தப் படம் அப்போதுள்ள விஜய் படங்களின் அத்தனை சாதனையையும் முறியடித்தது. அதற்கு முன்னதாக ப்ரண்ட்ஸ், காதலுக்கு மரியாதை படங்கள் விஜய்யின் ஹிட் லிஸ்ட்டில் இருந்தது. இதனை கில்லி முறியடித்து விஜய்க்கு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது.

விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் என்ற மூவர் கூட்டணியுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இயக்குநர் தரணி தில், தூள், கில்லி என ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தார். வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியது. இப்படத்தில் இடம்பெற்ற அப்படிப் போடு பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் வித்யாசாகர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிகறார். அதில் இயக்குநர் தரணி நல்ல மாஸா ஒரு குத்துப் பாடல் வேண்டும் வித்யாசாகரிடம் கேட்டிருக்கிறார்.

உன்னோட இசைக்காகவே கதை எழுதுறேன்யா.. இளையராஜாவை பஞ்சு அருணாச்சலம் தேர்ந்தெடுத்தது இப்படித்தான்..

பின் வித்யாசாகர் இதுவரை நான் போட்ட பாடல்களிலேயே சரியான குத்துப்பாட்டு இதான். இனி நானே நினைத்தாலும் இப்படி ஒரு குத்துப் பாட்டைப் போட முடியாது என்று அந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடல் இன்றளவும் செம வைப் ஏற்றும் பாடலாக உள்ளது. மூட் அவுட்டில் இருப்பவர்களுக்கு இந்தப் பாடல் முக மலர்ச்சியைக் கொடுத்து அவர்களை உற்சாகப் படுத்தும். தமிழ் தாண்டி பாலிவுட்டிலும் இந்தப் பாடல் ஹிட் ஆகி பின் யுனிவர்சல் ஹிட் ஆக எதிரொலித்தது.

இந்தப் பாடலை எழுதியவர் பா.விஜய். வங்கப் பாடகர் கே.கே. மற்றும் அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியிருந்தனர். மேலும் கில்லி படப் பாடல்களைப் பற்றிக் முக்கியமாக குறிப்பிட வேண்டியது மற்றொன்று இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலைத் தவிர மற்ற அனைத்துப் பாடல்களும் தமிழ் பாடகர்கள் பாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓப்பனிங் பாடலான சூரத் தேங்காய் பாடலை திப்பு பாட,  அர்ஜூனரு வில்லு பாடல் மாணிக்க விநாயகத்துடன் சுக்வீந்தர் சிங்கும், திரிஷாவின் ஷாலல்லா பாடலை சுனிதி சௌகானும், கொக்கர கொக்கரக்கோ பாடலை உதித் நாராயணனும், காதலா காதலா பாடலை சுஜாதாவும் பாடியிருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.