இளையராஜாவுக்கு போட்டியாக வந்த 2 இசையமைப்பாளர்கள்.. இருவருமே ஆஸ்கர் பெற்ற அதிசயம்..!

By Bala Siva

Published:

தமிழ் சினிமாவில் கடந்த 80களில், 90களில் இளையராஜா இல்லாமல் தமிழ் சினிமாவே இல்லை என்ற நிலை இருந்தது. அப்போது அவருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட இரண்டு இசையமைப்பாளர்கள் பின்னாளில் ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் சினிமா என்றால் ஒரு காலத்தில் இளையராஜாவை மட்டுமே நம்பி இருந்தது என்பதும் தினந்தோறும் அவருடைய ஸ்டூடியோவில் இளையராஜாவின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகழின் உச்சியில் இருந்தபோது திடீர் திருமணம்.. திரையுலகில் இருந்து காணாமல் போன அமலா..!

இளையராஜாவின் கடைக்கண் பார்வை பெற்று அவர் தங்களது படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டு விட்டார் என்று உறுதி செய்யப்பட்டால் அந்த படம் உடனே வியாபாரம் ஆகிவிடும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் தான் தொடர்ந்து தனது படங்களுக்கு எம்எஸ் விஸ்வநாதன் அவர்களை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்த கே பாலச்சந்தரை இளையராஜாவுடன் ஒரு படத்தில் பணி புரியுங்கள் என்று பலர் அறிவுறுத்தினர். ஆனால் எம்எஸ் விஸ்வநாதனை விட்டு விட்டு நான் வேறு எந்த இசையமைப்பாளரிடம் செல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக கே. பாலச்சந்தர் இருந்தார்.

இந்த நிலையில் தான் பல நண்பர்கள் வலியுறுத்தலுக்கு இணங்க முதல் முறையாக அவர் ’சிந்து பைரவி’ திரைப்படத்திற்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்தார். அந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் கர்நாடக இசை பாடல்களை அந்த அளவுக்கு வேறு எந்த இசையமைப்பாளர்களும் இசையமைத்திருக்க முடியாது என்று அந்த படம் வெளியான போது பேசப்பட்டது.

தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகை.. நதியாவின் சுவாரஸ்யமான திரையுலக வாழ்க்கை..!

மேலும் இந்த படத்திற்கு அவர் கம்போஸ் செய்த ‘பாடறியேன் படிப்பறியேன்’ என்ற பாடலை பாடிய சித்ராவுக்கு தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு ’புன்னகை மன்னன்’ ’புதுப்புது அர்த்தங்கள்’ ‘உன்னால் முடியும் தம்பி’  உள்பட பல படங்களில் இளையராஜாவை கே.பாலசந்தர் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கும் பாலச்சந்தருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இளையராஜாவை பிரிந்தார்.

mm keeravani 1

இளையராஜாவுக்கு போட்டியாக அவர் களமிறக்கியவர்தான் மரகதமணி. தற்போது தெலுங்கு திரை உலகில் எம்எம் கீரவாணி என்று புகழ்பெற்று இருக்கும் இசையமைப்பாளரைத்தான் தமிழில் மரகதமணி என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் உருவான படம் ’அழகன்’. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து பல திரைப்படங்களில் மரகதமணியை பாலசந்தர் பயன்படுத்தினார். ஆனால் ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கு எதிராக நம்மை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொண்ட மரகதமணி மீண்டும் தெலுங்கு திரை உலகிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் தான் இளையராஜாவுக்கு இணையாக ஒரு இசையமைப்பாளரை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற முடிவு செய்த கே. பாலச்சந்தர் தான் தயாரித்த ’ரோஜா’ படத்தில் ஏஆர் ரகுமானை அறிமுகம் செய்தார்.

AR Rahman

முதல் படமே ஏஆர் ரகுமானுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்ததை அடுத்து அவர் இளையராஜாவுக்கு இணையான ஒரு இசையமைப்பாளராக மாறினார். அது மட்டும் இன்றி இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமீபத்தில் எம்எம் கீரவாணியும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது பெற்றார்.

16 வருஷம் ஒண்ணா வாழ்ந்தும் குழந்தை இல்லை.. நடிகை ரேவதியின் விவாகரத்துக்கு என்ன காரணம்?

இளையராஜாவுக்கு போட்டியாக களமிறக்கப்பட்ட இரண்டு இசையமைப்பாளர்களும் இளையராஜாவுக்கு இணையாக இல்லை என்றாலும் உலக புகழ் பெற்ற ஆஸ்கர் விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.