ஒரே கதையம்சத்தில் 3 படங்கள்.. மூன்றுமே செம்ம ஹிட்.. தில்லானா மோகனாம்பாள்.. கரகாட்டக்காரன்.. சங்கமம்..!

Published:

ஒரே கதை அம்சத்தில் மூன்று திரைப்படங்கள் தமிழ் திரை உலகில் வெளியாகி மூன்றுமே ஹிட்டான படங்கள் குறித்துதான் தற்போது பார்க்கப் போகிறோம்.

முதலாவதாக சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் கடந்த 1968ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தில்லானா மோகனாம்பாள்’. இந்த படத்தில் சிக்கல் சண்முகசுந்தரம்  தலைமையிலான ஒரு  பாட்டு குழுவும், மோகனாம்பாள் தலைமையில் ஒரு பரதநாட்டிய குழுவும் இருக்கும். இந்த இரண்டு குழுவும் முதலில் சந்திக்கும் போது மோதல் ஏற்பட்டு அதன் பின் மெல்லிய காதல் ஏற்பட்டு அந்த காதல் பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு சுபமாக முடியும் என்பதுதான் கதை.

டிகே பட்டம்மா முதல் சின்மயி வரை.. பாடகிகளின் முதல் தமிழ்ப்பாடல் பட்டியல்..!

thillana

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இசையமைத்த கேவி மகாதேவனின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியது. அதிலும் ‘நலந்தானா’ என்ற பாடல் இன்று வரை பிரபலம்.

இரண்டாவது கிட்டத்தட்ட இதே கதை அம்சத்தில் வந்த திரைப்படம்தான் ‘கரகாட்டக்காரன்’. தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாடகர் குழுவுக்கும் நாட்டிய குழுவுக்கும் மோதல் என்றால் இதில் இரண்டுமே கரகாட்டக்கார குழுக்கள்தான். இரண்டு கரகாட்ட குழுவினர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்தான் கதை. முத்தையாவின் கரகாட்ட குழுவுக்கும், காமாட்சியின் கரகாட்ட குழுவுக்கும் நடக்கும் போட்டி, மோதல் அதன் பின் இருவருக்கும் இடையே ஏற்படும் காதல், அந்த காதலுக்கு வில்லனால் ஏற்படும் சிக்கல், கடைசியில் சுபம் என படம் முடிந்திருக்கும்.

karakattakaran

தில்லானா மோகனாம்பாள் படத்தின் கதைக்கும், இந்த படத்தின் கதைக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை என்றாலும் காட்சி அமைப்புகள், திரைக்கதை ஆகியவை முற்றிலும் வேறுபாடாக இருக்கும். மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் என்றால் அது மிகையாகாது. இந்த படத்தில் இடம்பெற்ற 9 பாடல்களும் சூப்பர் ஹிட்யாகியது. குறிப்பாக ‘மாங்குயிலே பூங்குயிலே’, ‘முந்தி முந்தி விநாயகனே’ ஆகிய பாடல்கள் செம ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைந்து போன தமிழ் திரைப்படம்.. இப்போ நினைச்சா கூட பார்க்க முடியாத படம் எது தெரியுமா?

தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் போலவே இரண்டு இசை குழுவினர் மோதும் இன்னொரு படம் சங்கமம். ரகுமான், விந்தியா நடிப்பில் உருவான இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருப்பார். இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருப்பார்.

sangamam

கர்நாடக இசை மற்றும் பரதநாட்டிய நடன குழுவுக்கும், கிராமத்து பாடல்களை பாடி ஆடும் கலைஞர் கூட்டத்திற்கும் இடைப்பட்ட மோதல், அதன்பின் ஏற்படும் காதல் தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘வராக நதிக்கரை ஓரம்’, ‘மார்கழி திங்கள் அல்லவா’ ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியது.

இளையராஜாவுக்கே இசை டெஸ்ட் வைத்த தயாரிப்பாளர்.. வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட இசைஞானி..!

மேற்கண்ட 3 படங்களிலும் இரண்டு விதமான இசைக் குழுவினர் இருப்பார்கள், ஒரு பக்கம் கதாநாயகி இன்னொரு பக்கம் கதாநாயகன், இருவருக்கும் இடையே முதலில் மோதல் ஏற்பட்டு அதன் பின் காதல் ஏற்பட்டு சுபமாக முடியும் என்பதுதான் கதையாக இருக்கும். இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட்டாகியது என்பது ஆச்சரியமான உண்மை.

மேலும் உங்களுக்காக...