இளையராஜாவுக்கே இசை டெஸ்ட் வைத்த தயாரிப்பாளர்.. வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட இசைஞானி..!

இசைஞானி இளையராஜா இன்று உலகின் மிகப்பெரிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தாலும் அவரது முதல் படம் என்பது பெரும் சோதனைக்கு பின்னரே கிடைத்தது.

பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் அவரே திரைக்கதை, வசனம் எழுத தேவராஜ் – மோகன் இயக்கத்தில் ஆர்.செல்வராஜ் கதையில் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. சிவகுமார் மற்றும் சுஜாதா ஆகிய இருவரும் நாயகன், நாயகி என முடிவு செய்தவுடன் இந்த படத்தில் புதிய இசையமைப்பாளரை அறிமுகம் செய்யலாம் என பஞ்சு அருணாச்சலம் முடிவு செய்தார்.

ஷங்கர் படத்தில் அறிமுகமான நடிகை.. மருமகளாக ஏற்று கொள்ள மறுத்த முதலமைச்சர்.. என்ன நடந்தது..?

annakili

இதை அவர் இயக்குனர்களிடம் தெரிவிக்க அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அந்த நேரத்தில் தான் கதாசிரியர் செல்வராஜ், ராஜா என்பவரை அறிமுகம் செய்தார். அவரை பாடல்கள் கம்போஸ் செய்து கேட்ட பஞ்சு அருணாச்சலம் திருப்தியாக இருந்ததை அடுத்து அவருக்கு இளையராஜா என்று பெயர் வைத்தார். ஏற்கனவே ராஜா என்ற பெயரில் பாடகர் ஒருவர் இருந்ததால் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த பெயரை வைத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அன்னக்கிளி திரைப்படத்திற்காக ஒரு பாடலை கம்போஸ் செய்து கொடுத்தார். இருப்பினும் இயக்குனர்களுக்கு இளையராஜா மீது திருப்தி வரவில்லை. அதனால் வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யலாம் என பஞ்சு அருணாச்சலத்திட்டம் கூறினர். ஆனால் பஞ்சு அருணாச்சலம் இளையராஜா தான் இசையமைப்பாளர் என்று உறுதியாக இருந்தார்.

annakili1

இதனை அடுத்து இயக்குனர்கள் இசைஞானி இளையராஜாவுக்கு ஒரு டெஸ்ட் வைக்க விரும்பினர். ஒரு கல்யாண மண்டபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் இளையராஜா நன்றாக பாடல் கம்போஸ் செய்து பாடினால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தயார் என்று கூறியிருந்தனர்.

இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் அப்போதைய மிகப்பெரிய பாடகியாக இருந்த ஜானகி, இளையராஜாவுக்கு உதவி செய்யும் வகையில் இந்த டெஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பெரிய பாடகிகள் டெஸ்ட் மற்றும் ரிகர்சல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் தன்னால் ஒரு இசையமைப்பாளரின் வேலை பறிபோகக்கூடாது என்பதற்காக அவர் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நன்றி கடனுக்காகத்தான் இளையராஜா அதன் பின் பல படங்களில் ஜானகிக்கு வாய்ப்பு கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

annakili3

டெஸ்ட் இசையமைப்பில் இளையராஜா மிக அருமையாக பாடல்களை கம்போஸ் செய்ததை அடுத்து இயக்குனர்கள் திருப்தி அடைந்து அன்னக்கிளி படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்திற்காக அவர் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்தார்.

ஒரு காட்சியை கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்த ‘திரிசூலம்’.. சிவாஜியின் 200வது படம்..!

‘அடி ராக்காயி மூக்காயி’, ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’, ‘மச்சான பாத்தீங்களா’ ஆகிய மூன்றும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியது. அதேபோல் ‘அன்னக்கிளி உன்னை தேடுது’ என்ற சோகமான பாடல் ஒன்றும் ‘சொந்தம் இல்லை பந்தம் இல்லை’ என்ற பாடலும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்தின் முதல் பாடலை இளையராஜா கம்போஸ் செய்த போது திடீரென கரண்ட் கட் ஆனது. இதனால் இளையராஜா மிகப்பெரிய அளவில் சோகம் அடைந்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு கரண்ட் வந்தவுடன் இரண்டாவது முறையாக பாடல் கம்போஸ் செய்யும் போது எலக்ட்ரீசியன் பிளக்கை சுவிட்ச் ஆன் செய்ய மறந்ததால் அதுவும் வீணானது. அதன் பிறகு மூன்றாவது முறையாக தான் இளையராஜா தனது முதல் பாடலை ஒலிப்பதிவு செய்தார் என்று கூறப்படுகிறது.

annakili2

1976ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த படத்தை பார்த்த பல விநியோகிஸ்தர்கள் படத்தை வாங்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது. படம் மிகவும் லோ பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் அதாவது அந்த காலத்தில் நான்கு லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பஞ்சு அருணாச்சலம் வேறு வழியின்றி இந்த படத்தை மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்தார். அதன் பிறகு தான் இந்த படம் ரிலீஸ் ஆனது. முதல் நாள் இரண்டு காட்சிகளில் இந்த படத்திற்கு கூட்டமே வரவில்லை. அதன் பிறகு இந்த படத்தை பார்த்தவர்கள் கூறிய பாசிட்டிவ் விமர்சனம் மற்றும் ஆனந்த விகடனில் வந்த விமர்சனம் ஆகியவை காரணமாக தான் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் தமிழகத்தில் உள்ள பல திரையரங்களிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் 205 நாட்கள் ஓடியது.

51 வயது முன்னாள் முதலமைச்சரை திருமணம் செய்து கொண்ட 24 வயது தமிழ் நடிகை..!

மொத்தத்தில் இன்று இசைஞானியாக இருக்கும் இளையராஜா தனது முதல் படத்திற்காக டெஸ்ட் கம்போஸ் செய்வதற்கு ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் என்பது இன்றைய சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான தகவலாக இருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.