நானும் என் நண்பர் சந்தோஷ் நாராயணனும் எதிர்காலத்தில் இந்த விஷயங்களை பண்ண பிளான் பண்ணிருக்கோம்… சித்தார்த் நெகிழ்ச்சி…

சித்தார்த் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகராக மட்டுமல்லாமல்…

sidharth

சித்தார்த் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகமும் பணிபுரிந்தார் சித்தார்த். தொடர்ந்து ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார் சித்தார்த்.

நீண்ட காலம் தெலுங்கு சினிமாவில் பணியாற்றி புகழ் பெற்ற பிறகு 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு திரும்பினார் சித்தார்த். அந்த ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்தார். பின்னர் காவியத்தலைவன், எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக், சிகப்பு மஞ்சள் பச்சை, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை 2, இந்தியன் 2, அருவம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் சித்தார்த்.

2023 ஆம் ஆண்டு சித்தா என்ற திரைப்படத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார். சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. அடுத்ததாக இந்தியன் 3 மற்றும் பலப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சித்தார்த். இவர் நடிகை அதிதி ராவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் நடித்த 3BHK படம் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சித்தார்த் தனது எதிர்காலத் திட்டங்களை பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நான் சிறுவயதில் இருந்தே பாடிக்கொண்டு இருக்கிறேன். நடிக்கவும் செய்கிறேன். சந்தோஷ் நாராயணனும் நானும் 10 வருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருக்கிறோம். நானும் அவரும் இணைந்து நடிப்பிற்கும் அடுத்ததாக திரைப்பட இசை, சுதந்திர இசை, கச்சேரி என இவற்றிலும் அடுத்ததாக கவனம் அதிகமாக செலுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறோம் என்று பகிர்ந்து இருக்கிறார் சித்தார்த்.