திருமுருக கிருபானந்தவாரியர் ஒரு சொற்பொழிவாளர் என்பதும் முருகன் மீது மிகுந்த பக்தி உள்ளவர் தனது சொற்பொழிவில் முருகப்பெருமானை பற்றி பேசுவார் என்பதும் தெரிந்ததே. சிறந்த பேச்சுத்திறமை, சமயம், இலக்கியம், எழுத்து திறமை, இசை போன்ற அனைத்திலும் புகழ்பெற்றவர் தான் கிருபானந்த வாரியார். இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவர் ஐந்தாவது வயதிலேயே திருவண்ணாமலையில் ஒரு மடத்தில் சேவை செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவரது சொற்பொழிவு தமிழகம் முழுவதும் பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக பாமர மக்கள் புரியும் வகையில் இலக்கியத்தை பேசுவார். மேலும் குட்டிக்கதைகளை நகைச்சுவையுடன் கூறும் திறன் இவருக்கு உண்டு.

இந்த நிலையில் கிருபானந்த வாரியார் நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் அறியாத தகவல். அவை நவக்கிரக நாயகி, துணைவன், திருவருள் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த மிருதங்க சக்கரவர்த்தி ஆகியவை ஆகும். கடந்த 1969 ஆம் ஆண்டு வெளியான துணைவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். ஏவிஎம் ராஜன், சௌகார் ஜானகி உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தில் எம்ஏ திருமுகம் இயக்கியிருப்பார். தன்னுடைய சொந்த கேரக்டரில் ல நிமிடங்கள் கிருபானந்த வாரியர் நடித்திருப்பார்.
அடுத்ததாக விஜயகாந்த், நளினி நடிப்பில் கே. சங்கர் இயக்கத்தில் உருவான நவக்கிரக நாயகி திரைப்படம் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் அவராகவே நடித்து இருப்பார். இதனை அடுத்து தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திருவருள் என்ற திரைப்படத்தில் திருமுருகன் கிருபானந்த வாரியார் நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சோகமான முடிவு என்றாலும் சுகமான முடிவு.. கமல்ஹாசன் – ஸ்ரீதேவியின் ‘வாழ்வே மாயம்’..!

கிருபானந்த வாரியர் ஒரு சில காட்சிகளில் கதையோடு வசனம் பேசி நடித்த ஒரே படம் என்றால் அது மிருதங்க சக்கரவர்த்தி திரைப்படம் தான். சிவாஜி கணேசன், பிரபு, கே ஆர் விஜயா உள்பட பலர் நடிப்பில் கே. சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிவாஜி கணேசன் மிருதங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவார். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் கிருபானந்த வாரியார், சிவாஜியின் மிருதங்கம் குறித்து சில வார்த்தைகள் பேசுவார்.
“இருவர் உள்ளம்” வெற்றிக்கதை….. இதில் சிவாஜி அம்மா யார் தெரியுமா…..?
சிவாஜி ஆசி பெறுவதும் போன்றும் காட்சிகள் அமைந்திருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பின்னர் தான் திருமுருக கிருபானந்த வாரியாரின் நன்மதிப்பில் ஒருவராக சிவாஜிகணேசன் இடம் பெற்றதாகவும் கூறப்பட்டது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
