“இருவர் உள்ளம்” வெற்றிக்கதை….. இதில் சிவாஜி அம்மா யார் தெரியுமா…..?

சிவாஜி கணேசனின் அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்த படம் இருவர் உள்ளம். எழுத்தாளர் லட்சுமியின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். இந்த படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் ஒரு மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார்.

பல பெண்களுடன் பழக்கம் இருக்கும். நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுவது, பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, பெண்களைக் காசு கொடுத்து மயக்குவது என Play Boy ஆக இருக்கும் இவருக்கு  திருமணத்தில் எந்த ஈடுபாடும் இருக்காது. இந்த நிலையில் தான் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த சிவாஜி, சென்னைக்கு வந்து மாமாவின் நிறுவனத்தை பொறுப்பாக கவனித்துக் கொண்டிருப்பார்.

அங்கு வைத்து சரோஜா தேவியை பார்த்த சிவாஜி அவரையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்றும் இனிமேல் வேறு பெண்களுடன் பழக கூடாது என்று முடிவு செய்வார். ஆனால் சரோஜாதேவி, சிவாஜியின் குணத்தை தெரிந்து அவரை வெறுப்பார். இந்த நிலையில் தான் சிவாஜியின் தங்கைக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பதற்காக சரோஜாதேவி வந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்படும்.

அதை பார்த்த சிவாஜியின் அம்மாவும் அப்பாவும் இருவருக்கும் ஜோடி பொருத்தம் சரியாக இருக்கிறது என்று கூறி திருமணம் செய்து வைக்க முடிவு செய்வார்கள், திருமணமும் நடக்கும். திருமணத்திற்கு பிறகு  சிவாஜி கணேசன் வேறு எந்த பெண்ணையும் நினைக்காமல் சரோஜாதேவியை மட்டுமே காதலித்துக் கொண்டிருப்பார்.

அஜித், விஜய் இருவருமே நடிக்க மறுத்த கதை.. துணிந்து நடித்த பார்த்திபன்.. சிறப்பு தோற்றத்தில் அஜித்..!

iruvar ullam1

ஆனால் அவர் இதற்கு முன் பழகிய பெண்கள் அவ்வப்போது குறுக்கிடுவதால் சரோஜாதேவி சந்தேகத்துடன் பார்ப்பார். தவறான நடத்தை உள்ள ஒருவன் திருந்தி வாழ்ந்தாலும் அவனை உலகம் நம்பாது என்பதை குறிக்கும் காட்சிகள் இந்த படத்தில் பல இருக்கும். தவறு செய்தவன் திருந்த மாட்டான், மீண்டும் மீண்டும் தவறு செய்வான் என்பது தான் பலரது கண்ணோட்டமாக இருக்கும், சரோஜா தேவியும் அதைத்தான் நினைத்தார்.

அதன் பின் ஏற்படும் சில திடுக்கிடும் திருப்பங்கள், சிவாஜி மீது விழும் ஒரு கொலை பழி, உண்மையான கொலையாளி யார்? அதன்பின் கணவன் மனைவி இருவரும் இணைந்தார்களா என்பது தான் இந்த படத்தின் கதையாக இருந்தது. இந்த படத்தின் மிகப்பெரிய பலம் எழுத்தாளர் லட்சுமியின் கதை என்று கூறலாம். லட்சுமி எழுதிய நாவலுக்கு மிக அருமையாக கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருப்பார்.

ரஜினி பட வில்லன் நடிகர் செந்தாமரையின் ரகசிய காதல் கதை! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அறிய தகவல்கள்!

ஆங்காங்கே தன் குசும்புத்தனத்தையும் நையாண்டியையும் நக்கலையும் அவர் வசனத்தில் இணைத்து இருப்பார்.  இந்த படத்தில் சிவாஜிகணேசன், சரோஜாதேவி ஆகிய இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். இதனால் யார் சிறப்பாக நடித்தார்கள் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இந்த படம் இருந்தது.

iruvar ullam

இந்த படத்தில் சிவாஜி கணேசன் அப்பாவாக எஸ்.வி.ரங்காராவ், அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்திருந்தனர். இருவருமே மகன் மீது பாசத்தை பொழியும் அற்புதமான கேரக்டரில் நடித்திருந்தார்கள். அதிலும் சந்தியாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. கேவி மகாதேவன் இசையமைத்த பறவைகள் பலவிதம், இதயவீணை, அழகு சிரிக்கின்றது, நதி எங்கே போகிறது போன்ற இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருந்தார்.

சிவாஜி கணேசன் நடித்த மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக ’இருவர் உள்ள’ படம் அமைந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சில வருடங்கள் கழித்து மீண்டும் புத்தம் புதிய காப்பு என்ற பெயரில் மீண்டும் திரைக்கு வந்து பத்து வாரங்கள் வரை ஓடியது. 1963ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான ’இருவர் உள்ளம்’ வெளியாகி 60 ஆண்டுகள் ஆகிவிட்டன.

சோகமான முடிவு என்றாலும் சுகமான முடிவு.. கமல்ஹாசன் – ஸ்ரீதேவியின் ‘வாழ்வே மாயம்’..!

இப்போதும் இந்த படத்தின் கதை பல படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். வாழ்க்கையில் தவறு செய்வது என்பது சகஜம். ஆனால் திருந்தி வாழ்வது முக்கியம், திருந்தி வாழ்பவர்களுக்கு சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கைகோர்த்துக் கொண்டால் நல்லவனை கூட கெட்டவனாக தான் இந்த உலகம் நம்பும் என்பதை ஒவ்வொருவரும் புரியும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews