தளபதி 68 படத்தின் வில்லன் இவர் தான்! திரையரங்கத்தை அதிர வைக்கும் கலக்கல் அப்டேட்!

Published:

தளபதி விஜய்யின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். இந்த படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது.

மேலும் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் விஜய் 68வது படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது கசிய தொடங்கியுள்ளது. இந்த படத்தில் குற்றவியல் புலனாய்வு ஆய்வாளர்கள் குழுவை வழிநடத்தும் முத்த சிபிஐ அதிகாரியாக விஜய் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் சகோதரனாகவும் குற்றங்களை தீர்ப்பதில் உதவியாளராகவும் நடிகர் ஜெய் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். ஆனால் இந்த தகவல் இன்றுவரை உறுதி செய்யப்படவில்லை.

மேலும் தளபதி 68வது படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என சமீபத்தில் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியதால் படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யாவை வில்லனாக நடிக்க வைக்க இயக்குனர் வெங்கட் பிரபு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்.ஜே சூர்யா ஹீரோவாக நடித்ததற்கு கிடைத்த வரவேற்பை விட வில்லனாக நடிப்பதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. எஸ்.ஜே சூர்யா விஜய்யுடன் இணைவது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்பே விஜய் வைத்து குஷி என்னும் வெற்றி படத்தை இயக்கியுள்ளார்.

இணையத்தில் அசுர சாதனை படைத்த ரஜினியின் காவாலா!

அடுத்ததாக நண்பன், மெர்சல் மற்றும் வாரிசு போன்ற விஜய்யின் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பிரபல நடிகர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். இப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் உங்களுக்காக...