இணையத்தில் அசுர சாதனை படைத்த ரஜினியின் காவாலா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பல நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் மாஸாக நடைபெற்றது.

இந்நிலையில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் காவலா பாடல் யூடியூப்பில் மட்டும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில் யூடியூப் ரீல்ஸ், ஸ்பாட்டிபை உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எவ்வளவு பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளில் ஜெயிலர் படத்தின் புக்கிங் தொடங்கி மாஸ் ஆக நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் நாளை புக்கிங் தொடங்குகிறது. முன்னதாக அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் காவாலா, ஹுக்கும், ஜுஜுப்பி மற்றும் இன்று வெளியான ரத்தமாரை ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கொண்டே நிர்வாகிகளை ஆட்டி படைக்கும் விஜய்!

அதிலும் குறிப்பாக அருண் ராஜ் காமராஜா எழுதிய காவாலா பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் யூடியூபில் மட்டும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த காவாலா பாடல் ஸ்பார்ட்டிபை உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில்  பெற்ற பார்வையாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்பார்ட்டிபில் 17 மில்லியன் பார்வையாளர்களையும் யூடியூப் மியூசிக் 10 மில்லியன் பார்வையாளர்களையும் யூடியூப் ரில்ஸ்சில் 6 இலட்ச பார்வையாளர்களையும், யூடியூப் சாட்சில் 8 இலட்ச பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews