ஜெயிலர் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு ரகசியமாக உதவிய விஜய்! அனல் பறக்கும் அப்டேட் கொடுத்த பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடு விழாவில் ரஜினி பேசியதில் இருந்து ரஜினி ரசிகர்களுக்கு இந்த படத்தின்…

collage8 1686459346

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடு விழாவில் ரஜினி பேசியதில் இருந்து ரஜினி ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில் சமீபத்தில் வெளியான ட்ரைலர் வீடியோ மக்களிடையே ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் ஜெயிலர் படத்தின் ப்ரீ புக்கிங் வேகமாக நடை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர்ட் டெரெக்டர் கிரண் தளபதி விஜய் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி மீது வைத்திருக்கும் மரியாதை குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளது தற்பொழுது வைரலாகி வருகிறது.

இணையத்தில் அசுர சாதனை படைத்த ரஜினியின் காவாலா!

அதில் விஜய்யின் வாரிசு படம் ஐதராபாத்தில் ஒரு செட்டில் நடக்கும் போது பக்கத்தில் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் ஆர்ட் டெரெக்டர் கிரண் இருந்ததாகவும் அப்போது விஜய்யை பார்க்க சென்றதாகவும் கூறினார். அப்பொழுது விஜய் அவர்கள் ரஜினியின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு குறித்து விசாரித்ததாகவும் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து தலைவரின் உடல் நிலை குறித்தும் அவர் நலமாக உள்ளாரா என கேட்டதாகவும் கூறினார். அதில் விஜய் அவர்கள் ரஜினியை சார் என அழைக்காமல் தலைவர் என்று தான் அழைத்தார் என வெளிப்படையாக தெரிவித்தார்.

மேலும் தளபதி விஜய் தான் ஜெயிலர் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு இயக்குனர் நெல்சனை கால் செய்து எழுப்பி விரைவாக செல்லுமாறு கூறியதாகவும் தெரிவித்தார். இதில் இருந்தே தளபதி விஜய் ரஜினி அவர்கள் மீது தீராத மரியாதை வைத்துள்ளார் என்பது நமக்கு புரிகிறது.