நள்ளிரவு 12 மணிக்கு கமலின் வீட்டு கதவைத் தட்டிய தயாரிப்பாளர்! உடனே நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!

Published:

உலகநாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் கமல் தற்பொழுது விக்ரம் திரைப்படத்தின் மூலமாக ரீ எண்டரி கொடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான விக்ரம் திரைப்படம் கமலுக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. இந்த படத்தின் மூலம் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல இயக்குனர்களுடன் கமல் நடித்து வருகிறார். தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் கமல் இந்த படம் முடிந்த பிறகு மணிரத்தினம் இயக்கும் தக் ஃப் லைஃப் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் அன்பறிவு இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இளம் இயக்குனர் அட்லியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. நடிகர் கமலஹாசனை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது இன்றைய இயக்குனர்களின் கனவாகவே மாறி உள்ளது.

பொதுவாக சினிமா துறை என்பது ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தாலும் அதை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு வியாபாரமாகவே அமைந்துள்ளது. இதனால் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் இயக்குனர்களும் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமலஹாசனை வைத்து படம் இயக்க வேண்டும் என பல தயாரிப்பு நிறுவனங்களும் இயக்குனர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

சினிமா உலகில் அதிநவீன டெக்னாலஜிகளை பயன்படுத்தி மக்களை வியப்பில் ஆழ்த்தும் நடிகர்களில் நடிகர் கமலஹாசனும் ஒருவர். பல வேடங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார் கமல். நடிகர் கமலஹாசன் தான் நடிக்க இருக்கும் படங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பார் என்பது அவரை சுற்றியுள்ள நண்பர்களுக்கு நன்கு தெரியும். படத்தின் கதை குறித்து நன்றாக யோசித்து தேவைப்பட்டால் சில முன்னணி இயக்குனர்களுடன் கலந்து ஆலோசித்து தயாரிப்பாளர்களுடன் இணைந்து பேசி சுமுகமான ஒரு முடிவை எடுப்பார். ஆனால் கமல் 10 நிமிடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார் எனக் கூறினால் நம்மால் நம்ப முடிகிறதா? இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. இது குறித்து முழு தகவலை இப்பொழுது பார்க்கலாம்.

யாரு இந்த பவதாரணி.. அவரின் சாதனைகள் என்ன? அறியாத பல தகவல்கள்!

நடிகர் கமலஹாசனுடன் இயக்குனர் ஐ வி சசி மிகுந்த நட்புறவிலிருந்து வந்துள்ளார். ஒரு நாள் நள்ளிரவு 12 மணிக்கு கமலஹாசனின் வீட்டு கதவை இயக்குனர் சசி தட்டி உள்ளார். அவருடன் ஒரு பிரபல தயாரிப்பாளரும் இருந்துள்ளார். அவர்களை உள்ளே வரவேற்ற கமல் பேசியுள்ளார், உடனே இயக்குனர் சசி கமலிடம் இந்த தயாரிப்பாளர் தயாரிப்பில் நீங்கள் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பும் நாளை காலை செய்தித்தாளில் வெளியாக வேண்டும் என கூறியுள்ளார். சசியின் விருப்பத்தை புரிந்து கொண்ட கமலும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அப்படி கமல் நடித்து வெளியான திரைப்படம் தான் குரு. 1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து ஸ்ரீதேவி ஜோடியாக நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு எனும் இரு மொழிகளில் எடுக்கப்பட்டு வெளியானது. குறிப்பாக இந்த திரைப்படம் ஸ்ரீலங்காவில் மட்டும் ஆயிரம் நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. சினிமா துறையில் சில சமயங்களில் இது போன்ற அவசர முடிவு எடுத்து வெளியாகும் திரைப்படங்கள் கூட வெற்றியின் உச்சத்தை தொடும் என்பதற்கு உதாரணமாக அமைந்த திரைப்படம் தான் குரு.

மேலும் உங்களுக்காக...