யாரு இந்த பவதாரணி.. அவரின் சாதனைகள் என்ன? அறியாத பல தகவல்கள்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமான இளையராஜாவின் மகள் பவதாரணி இறப்பை தொடர்ந்து அவர் பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றன. இசை ஞானி இளையராஜாவின் இசை குடும்பத்தில் கடந்த 1976 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பவதாரணி. சென்னையில் ரோசரி மாட்ரிக் பள்ளியிலும், ஆதார்சு வித்தியாலயம் என்ற மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பை முடித்துள்ளார். இவர் 1987 திரைக்கு வந்த மை டியர் குட்டிச்சாத்தான் என்ற படத்தில் ஒரு பாடல் பாடினார். இந்த பாடலை தொடர்ந்து பவதாரணி இசை பயணம் வெற்றிகரமாக ஆரம்பமானது.

இந்த பாடலை தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு வெளியான ராசையா திரைப்படத்தில் இடம்பெற்ற மஸ்தானா மஸ்தானா பாடலை மிகச் சிறப்பாக பாடியிருப்பார். இந்தப் பாடலின் மூலம் பல தென்னிந்திய பாடல்கள் ஓரம் கட்டி பிரபலத்தின் உச்சியில் இருந்தார் பவதாரணி. இசை உலகில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட பவதாரணி அடுத்தடுத்த திரைப்படங்களில் பாட ஆரம்பித்தார். அந்த வகையில் அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் பாடியிருந்தார். இந்த பாடல்களை தொடர்ந்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தன் பாடல்களின் மூலம் பிரபலம் அடைந்தார் பவதாரணி.

மேலும் பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒண்ணு கிளி போல பேச்சு ஒன்னு பாடலுக்காக தேசிய விருதையும் மத்திய அரசிடம் இருந்து வாங்கிக் கொண்டவர். இந்த நிலையில் அவருடைய சகோதரர்களான யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா என இருவருக்கும் நிகராக தமிழ் மற்றும் இன்றி ஹிந்தி தெலுங்கு என பழமொழி படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார் பவதாரணி. வித்தியாசமான இவரின் காந்தக் குரல்களால் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.

டாப் ஹீரோக்கள் இயக்கிய திரைப்படங்கள் ஒரு பார்வை!

அதை அடுத்து பாடகியாக மட்டுமல்லாமல் தன் தந்தையைப் போல படங்களுக்கு இசையமைக்கவும் ஆரம்பித்துவிட்டார். இதன்படி நடிகர் ரேவதியை இயக்கிய மித்ரா மை ஃபிரண்ட் என்ற படத்தில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு அதிகமானது. இலக்கணம், மாயா நிதி உள்ளிட்ட பத்து படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவ்வளவு சாதனைகளை செய்த பவதாரணி எஸ்.என்.ராமச்சந்திரனின் மகன் ஆர்.சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பவதாரணி கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த பவதாரணி தனது 47 வது வயதில் காலமானார். பவதாரணியின் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் அவரின் ஆன்மா சாந்தியடைய பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.