பாரதிராஜாவின் முதல் நாயகி.. கண்களால் நடிக்கும் நடிகை அருணா..!

Published:

பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட பல நடிகர், நடிகைகள் தமிழ் திரை உலகில் புகழ் பெற்றுள்ளார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டது மட்டுமின்றி பாரதிராஜாவுக்கு முதல் முதலாக ஜோடியாக நடித்தவர் என்ற புகழை பெற்றவர்தான் நடிகை அருணா.

நடிகை அருணா ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை தொடர்வதற்காக விண்ணப்பங்கள் வாங்கிக் கொண்டிருக்கும்போது தான் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து வந்ததை கவனித்தார். ஒல்லியான தேகம், கண்ணாடி அணிந்த அவர் தன்னை ஏன் பின்தொடர்கிறார் என்று அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர் வீட்டுக்குள் சென்றார்.

2500 நாடகங்கள்.. 250க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்.. இயல்பான நடிப்பில் அசத்திய பசி சத்யா..!

அந்த மனிதர் வீட்டுக்குள்ளும் நுழைந்து அவரது தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார். அருணாவுக்கு அப்போது தமிழ் தெரியாது என்பதால் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாது. அதன்பிறகு தான் அருணாவின் தந்தை அவரிடம் வந்து நீ சினிமாவில் நடிக்கிறாயா? இவர் பெயர் நிவாஸ், இவர் ஒரு தயாரிப்பாளர், அவர் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் உன்னை நடிக்க வைக்க ஆசைப்படுகிறார் என்று கேட்டார்.

இதனையடுத்து முயற்சி செய்து பார்ப்போம் என்று முடிவு செய்து அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, சென்னைக்கு வந்து பாரதிராஜாவை பார்த்தார். பாரதிராஜா அருணாவின் கண்களை பார்த்தவுடனே ஓகே சொல்லிவிட்டார். அப்படித்தான் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அருணா. அந்த படம் தான் கல்லுக்குள் ஈரம்.

இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும், அவர் நடிப்பு போதும் கல்லூரி படிப்பை தொடர்வோம் என்று மீண்டும் ஆந்திராவுக்கு சென்று விட்டார். ஆனால் அவரை ஆந்திராவுக்கு வந்து தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியதை அடுத்து அவர் வேறு வழியில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கிராமத்து கேரக்டர்.. குலவை பாடல்.. ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்ற தேனி குஞ்சரம்மாள்..!

அவரது மூன்றாவது படமே விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி. அந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து மீண்டும் விஜயகாந்துடன் நீதி பிழைத்தது என்ற படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து ஆனந்த ராகம், சட்டம் சிரிக்கிறது, டார்லிங் டார்லிங் டார்லிங் போன்ற படங்களில் நடித்தார். பாரதிராஜா இயக்கத்தில் உருவான முதல் மரியாதை என்ற திரைப்படத்தில் சிவாஜியின் மகளாக நடித்திருப்பார். அதில் சின்ன கேரக்டர் என்றாலும் அவர் நடிப்பில் அசத்தி இருப்பார்.

மேலும் விசு இயக்கத்தில் உருவான பெண்மணி அவள் கண்மணி என்ற படத்தில் ஒரு திமிர் பிடித்த மருமகளாக, மாமியாரை கொடுமைப்படுத்தும் கேரக்டரில் நடித்திருப்பார். மேலும் நாகார்ஜுனா நடித்த இதயத்தை திருடாதே என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருப்பார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டு தொழிலதிபர் மோகன் என்பவரை அருணா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

முதல் படமே காணாமல் போனது.. குணச்சித்திர நடிகர் கே.கே.சௌந்தர் கடந்த பாதை..!

திருமணத்துக்கு பின்னரும் நடிகை அருணா ஒரு சில படங்களில் நடித்தார். கடந்த 1990ஆம் ஆண்டு வரை அவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதன்பிறகு குழந்தைகளை கவனிக்க வேண்டி இருந்ததால் அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. இருப்பினும் பழைய படங்களில் அவருடைய கண்களை பார்த்தால் கண்களே நடிக்கும் என்ற ரசிகர்கள் பலர் கூறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...