முதல் படமே காணாமல் போனது.. குணச்சித்திர நடிகர் கே.கே.சௌந்தர் கடந்த பாதை..!

தமிழ் திரை உலகின் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரும், ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்தவருமான கே.கே.சௌந்தர் நடித்த முதல் திரைப்படம் எங்கே போனது என்றே தெரியாத அளவு காணாமல் போனது. இருப்பினும் அவர் பல திரைப்படங்களில் தனது முத்தான நடிப்பை ரசிகர்கள் மனதில் பதிய வைத்து இன்றும் அவர் ரசிகர்கள் மனதில் குடியிருக்கிறார்.

நடிகர் கேகே சௌந்தர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 1925 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், சிறு வயதிலேயே கலை நடிப்பு ஆகியவற்றில் ஆர்வத்துடன் இருந்தார். திருவிழாக்களில் உள்ள மேடை நாடகங்களை நடித்த அவர் ஒரு கட்டத்தில் பாய் நாடக கம்பெனியில் சேர்ந்து தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டார்.

இவர் பேர் சொல்வதும் பெருமை கொள்வதும் சினிமாவுக்கே அழகு… நடிகர் திலகத்தின் அசத்தலான ஆறு படங்கள்..!!

தமிழக முழுவதும் பல ஊர்களில் இந்த நாடக கம்பெனி நடத்திய நாடகங்களில் இவர் சின்ன கேரக்டர் முதல் பெரிய கேரக்டர் வரை நடித்தார். இந்த நிலையில் தான் 1939 ஆம் ஆண்டு வள்ளலார் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ஜோதி என்ற திரைப்படத்தில் கேகே சௌந்தர் அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கு குறிப்பிட்ட கேரக்டர் கிடைத்ததால் அவரது முகம் மக்கள் மனதில் பதிந்தது.

ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆன சில வருடங்களில் காணாமல் போனதாகவும் இந்த படத்தின் படச்சுருள் எங்கே போனது என்றே தெரியவில்லை என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து சிறு சிறு கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த கேகே சௌந்தர் அவ்வப்போது நாடகங்களிலும் நத்தார். அதன் பிறகு பத்து ஆண்டுகள் வாய்ப்புக்காக போராடிய நிலையில், 1950ஆம் ஆண்டு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி ஒரு கேரக்டர் கிடைத்தது. அதுதான் எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி என்ற திரைப்படம்.

ஹேமாமாலினி நடிக்க வேண்டிய படம்.. அவருக்கு பதில் அறிமுகமான ஜெயலலிதா.. வெண்ணிற ஆடை செய்த சாதனை..!

கடந்த 1950 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடித்த அவருக்கு அடுத்தடுத்து எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சிவாஜி கணேசன் நடிப்பில் கருணாநிதி வசனத்தில் உருவான திரும்பிப்பார், எம்ஜிஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும், மனோகர் நடித்த வண்ணக்கிளி, சிவாஜி நடித்த அன்னை இல்லம், எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, சிவாஜி கணேசன் நடித்த சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் அவர் மிகவும் பிசி ஆனார். 90 ஆம் ஆண்டுகளில் அவர் உச்சத்தில் இருந்தார். எம்ஜிஆர், சிவாஜி முதல் ஜெயம்ரவி வரை அவர் ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான உன்னை நினைத்து என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படமே அவரது கடைசி படமாக அமைந்தது. நடிகர் கே.கே சௌந்தர் கடந்த 2003ஆம் ஆண்டு பிப்ரவரி எட்டாம் தேதி மறைந்தார்.

பாலியல் தொழிலாளி கதாபாத்திரம்… துணிந்து நடித்த நடிகைகள்..!!

கே.கே. சௌந்தர் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அவருக்கு கதாநாயகன் கேரக்டர் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த குணசத்திர வேடங்களை அவர் சரியாக பயன்படுத்தி மக்கள் மனதில் இடம் பெற்றார். அவரது பண்பட்ட நடிப்பை ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.

நடிகர் கேகே சௌந்தர் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு ஞானசுந்தரி என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். 3 மகன்களுமே திரையுலகை தேர்வு செய்யாமல் வெவ்வேறு துறைகளில் பிரபலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews