கிராமத்து கேரக்டர்.. குலவை பாடல்.. ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்ற தேனி குஞ்சரம்மாள்..!

தமிழ் சினிமாவில் கிராமத்து பாடல்கள் பாடி பிரபலமான பல நடிகைகள் உள்ளனர். அப்படி பரவை முனியம்மா,  கொல்லங்குடி கருப்பாயி போன்றவர்களை கூறலாம். அந்த வரிசையில் கிராமத்து பாடல்கள் பாடி திரையுலகில் புகழ் பெற்றவர்களில் ஒருவர் தான் தேனி குஞ்சரம்மாள்.

1933 ஆண்டு தேனியில் ஒரு விவசாய குடும்பத்தில் குஞ்சரம்மாள் பிறந்தார். சிறுவயதில் சங்கீதத்தில் மிகவும் ஆர்வத்துடன் இருந்த இவர் குலவையுடன் கூடிய பாடல்களை பாடுவார், கோவில் திருவிழாக்களில் கும்மி பாட்டு பாடுவார்.

சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன பிரம்மாண்ட ஹிந்தி நடிகர்!

அதன் பிறகு ஒரு வயதுக்கு மேல் அவர் ஆன்மீக பாடல், கிராமத்து பாடல் ஆகியவை கொண்ட கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர்  தேனி குஞ்சரம்மாள் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். அவரது நிகழ்ச்சிக்கும் அவரது கிராமப்புற பாடல்களுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தான் பாரதிராஜா இயக்கத்தில் உருவான  வேதம் புதிது என்ற திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பார்த்திபன் இயக்கிய புதிய பாதை ராம்கி நடித்த மருதுபாண்டி பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா சரவணன் நடித்த தாய் மனசு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இவர் நடித்த பெரும்பாலான கேரக்டர்கள் கிராமத்து கேரக்டர்கள். நடிப்பு மட்டுமின்றி இவர் திரையுலகில் பாடல்களையும் பாடியுள்ளார். முதல் முறையாக இசையில் காதலன் என்ற திரைப்படத்தில் பேட்டராப் என்ற பாடலை பாடினார். இந்த பாடலை பாடி முடித்ததும், அவருக்குக் ஏஆர். ரஹ்மான் பாராட்டு தெரிவித்தார்.

5 வயது முதல் நடிப்பு.. 45 ஆண்டுகளில் 750 படங்கள்.. நடிகை சண்முகப்பிரியாவின் திரையுலக பயணம்..!

இதனை அடுத்து அவர் கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற ஆராரோ ஆரிராரோ என்ற பாடல், முத்து படத்தில் இடம்பெற்ற கொக்கு சைவ கொக்கு என்ற பாடல், தாஜ்மஹால் படத்தில் இடம்பெற்ற அடி மஞ்சக்கிழங்கே உள்பட பல பாடலை   பாடியுள்ளார்.

நடிப்பு மற்றும் பாடல்களில் மிகச் சிறந்த கலைஞராக இருந்த  தேனி குஞ்சரம்மாள் அரசியலிலும் ஈடுபட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்து தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது அவர் அதிமுகவின் பாடல்களை பாடினார்.

தேனி குஞ்சரம்மாள் அவர்களுக்கு மூன்று மகள்கள் உண்டு, கணவர் சிறு வயதிலேயே இறந்து விட்டதால் மூன்று மகள்களையும் அவர் தன்னுடைய சினிமா மற்றும் பாடல்கள் பாடுவதால் கிடைக்கும் வருமானத்தின் மூலம் தான் வளர்த்தார்.

தமிழில் 10 படங்கள் மட்டுமே.. கணவருடன் இணைந்து தொழிலதிபரான நடிகை ஸ்வப்னா..!

இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி திடீரென அவர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகை மற்றும் பாடகியாக இருந்தவர்  தேனி குஞ்சரம்மாள் என்பதும் அவரது பாடல்கள் இன்றும்  மனதை உருக்கும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews