GOAT Review: தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனங்கள்..!

By Bala Siva

Published:

GOAT Review: விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் எதிர்பார்ப்பை விட அதிகமாக படம் இருப்பதாக ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் பதிவு செய்து வருவதை அடுத்து இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட் என்று கூறப்பட்டு வருகிறது.

படத்தின் ஆரம்பமே அபாரமாக இருப்பதாகவும், இதுவரை இல்லாத அளவில் விஜய்யின் என்ட்ரி இருப்பதாகவும் ட்விட்டர் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முதல் பாதி விஜய்யின் வழக்கமான காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் ஜாலியான காட்சிகள் அதன்பின் ஒரு அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் என செல்வதாகவும், இன்டர்வெல் பிளாக் த்ரில்லுடன் இருப்பதாகவும் அதன் பின் இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க விறுவிறுப்பு என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கடைசி 40 நிமிடங்கள் மிகவும் மாஸாக இருப்பதாகவும் குறிப்பாக கிளைமாக்ஸ் 10 நிமிட காட்சிகள் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததில்லை என்றும் தளபதி மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணி ரசிகர்களுக்கு செம விருந்தை கொடுத்துள்ளதாகவும் படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் டீஏஜிங் டெக்னாலஜி மிகவும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக இளைய தளபதி விஜய்க்கும், கேப்டன் விஜயகாந்துக்கும் டீஏஜிங் பணிகள் 100% திருப்தியாக இருப்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

த்ரிஷாவுடன் விஜய் டான்ஸ் திரையில் தோன்றும் போது தியேட்டரே எழுந்து ஆடுகிறது என்றும் விஜய் ரசிகர்களுக்கு இந்த பாடல் இன்னும் ஒரு ’அப்படி போடு’ பாடலாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டரையும் இயக்குனர் வெங்கட்பிரபு சரியாக பயன்படுத்தி உள்ளார் என்றும் குறிப்பாக பிரசாந்த் மற்றும் பிரபுதேவா கேரக்டர்கள் சினேகா மற்றும் மீனாட்சி கேரக்டர்கள் ஆகியவை சிறப்பாக உள்ளதாகவும் ட்விட்டர் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் ‘கோட்’ திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கான படமாக மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றும் நிச்சயம் இந்த படம் பிளாக் மாஸ்டர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் உங்களுக்காக...