தளபதி 68 படம் வாரிசு படத்தின் இரண்டாம் பாகமா.. கலாய்த்தவர்களுக்கு பதிலடி இதோ!

Published:

தென்னிந்திய திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தான் லியோ திரைப்படம். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்த லியோ திரைப்படம் இந்த மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க உள்ளார்.

ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் தளபதி 68 படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி உள்ள நிலையில் முதலில் பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. நடன இயக்குனர் ராஜசுந்தரம் அவர்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்தின் பூஜையின் போது பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வமான புகைப்படங்கள் லியோ வெளியீட்டிற்கு பின் வெளியாகும் என வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தளபதி 68 படத்தின் மற்றொரு மாஸ் அப்டேட் ஆக இந்த படத்தில் ஒரு வில்லனாக முன்னணி ஹீரோ மைக் மோகன் இணைய உள்ளதாக உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து தளபதி படத்தில் முன்னணி கதாநாயகியான லைலா நடிக்க உள்ளதாகவும் தகவல் தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருக்கும் பட்சத்தில் நான்காவது ஹீரோயினாக லைலா இணைய வாய்ப்புள்ளது.

வனிதா மகளா இது… என அனைவரையும் வாயை பிளக்க வைக்கும் ஜோவிகா விஜயகுமார் பற்றி அறியாத பல தகவல்!

பல முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்கள் என அடுத்தடுத்து பிரபலங்கள் இணைந்து நடிக்கும் தளபதி 68 படம் வாரிசு படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என சிலர் தன கருத்துக்களை பதிவிட்டு வரும் நேரத்தில் இந்தத் திரைப்படம் குடும்ப கதையை மையப்படுத்திய படம் அல்ல எனக் கூறும் அளவிற்கு ஒரு மாஸான அப்டேட் தற்பொழுது கிடைத்துள்ளது.

இந்த படத்திற்கு வசனகர்த்தாவாக எழுத்தாளர் விஜி இணைய உள்ளார். இவர் பல குடும்பப் பாங்கான கதைகளுக்கு வசனம் எழுதி இருந்தாலும் சில வருடங்களுக்கு முன் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு திரைப்படத்திற்கும் வசனம் எழுதியவர் விஜி தான். அதனால் இந்த திரைப்படத்தின் வசனங்கள் தெறிக்க விடும் வகையில் அமையும் என உறுதியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் அஜித்திற்கு ஒரு மங்காத்தா போல விஜய்க்கு ஒரு சிறப்பான இடத்தை பெற்றுத்தரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...