வனிதா மகளா இது… என அனைவரையும் வாயை பிளக்க வைக்கும் ஜோவிகா விஜயகுமார் பற்றி அறியாத பல தகவல்!

பிக் பாஸ் மூலமாக பிரபலம் அடைந்த முன்னணி நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் தான் ஜோவிகா விஜயகுமார். சமீபகாலமாக வனிதா விஜயகுமார் ஒவ்வொரு பேட்டியிலும் தன் மகளை புகழ்ந்து கூறும் அளவிற்கு ஜோவிகா விஜயகுமார் தன் வாழ்நாளில் என்னென்ன சாதனைகள் செய்துள்ளார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

ஜோவிகா விஜயகுமார் 2003 ஆண்டு பிறந்துள்ளார். அவர் 18 வயதை நிறைவு செய்துள்ளார். தற்போது ஜோவிகா முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க தொடங்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக இடம் பெற்ற நடிகை கேபிரில்லா, பாடகர் அஜித் மற்றும் நடிகை ஷிவானி ஆகியோர் நிகழ்ச்சியின் வெளியீட்டிற்கு பின் முன்னணி தொலைக்காட்சி சீரியல்களிலும், படங்களிலும் நடிப்பது போல ஜோவிகா விஜயகுமார் அவர்களும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல் படியாக கொண்டு அதில் போட்டியாளராக களம் இறங்கி உள்ளார் என கூறப்படுகிறது.

முன்னணி நடிகை வனிதா அவர்களின் குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்து வந்துள்ளார். தற்பொழுது சிங்கிள் மதராக இருந்து தன் குடும்பத்தை தானே வெற்றிகரமாக நடத்தி வரும் வனிதா அவர்களின் மகளுக்கும் அதே சுய தைரியமும், துணிச்சலும் அதிகம் உள்ளது என வனிதா நிறைய பேட்டிகளில் தன் மகள் ஜோவிகாவை பற்றி மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

தன் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக ஜோவிகா அவர்களின் படிப்பு பெரிதளவில் பாதிக்கப்பட்டதாகவும் ஜோவிகா அவர்களுக்கு படிப்பில் அதிக நாட்டம் இல்லாமல் போக அது ஒரு காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதனால் ஜோவிகாவை பல பள்ளிகளுக்கு மாற்றியதாகவும், எப்படியாவது தன் குழந்தையை நல்ல பட்டதாரியாக மாற்ற வேண்டும் என வனிதா முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சி வீணாக குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்கள் இஷ்டம் போல் அவர்களை வளர்க்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்துள்ளார் வனிதா.

collage 1693376304

வெறும் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே முடித்த ஜோவிகா அவர்கள் படிப்பில் நாட்டம் இல்லாததால் படிப்பை தொடர முயற்சிக்கவில்லை. ஆனால் அதற்கு பதிலாக நடிப்பில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்ததன் காரணமாக நடிப்பில் அவர் டிப்ளமோ முடித்து உள்ளார். மேலும் பாட்டி, அம்மாவை போன்று தானும் மிகப்பெரிய நடிகையாக வேண்டும் என்பதே அவரின் முதல் கனவாகவும் இருந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஜோவிகா அவர்களும் அவர் அம்மா வனிதா அவர்களும் இணைந்து ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தனர். அதில் முதலில் வனிதா அவர்கள் சமைக்கும் வீடியோக்கள் மட்டுமே பதிவாக்கப்பட்டிருந்தது. அதன் பின் நாளடைவில் ஜோவிகா அவர்களும் சமைக்க தொடங்கினார். அந்த வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சமையல் செய்வது, வீடியோக்களை எடிட் செய்வது என அனைத்து வேலைகளையும் திறமையாக செய்து வந்துள்ளார் ஜோவிகா.

படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் தன் மகளின் சினிமா மீது உள்ள ஆர்வத்தை புரிந்து கொண்ட வனிதா அவர்கள் தன் மகள் ஜோவிகாவை இயக்குனர் பார்த்திபன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்ற அனுப்பினார். அப்பொழுது தான் சினிமா குறித்த அனைத்து அடிப்படை தகவல்களும் தெரிந்து கொள்ள முடியும் என்பதற்காக அந்த முடிவு செய்துள்ளார்.

பெரிய குடும்பத்தைச் சார்ந்த குழந்தை என்ற எந்த தலைக்கணமும் வந்து விடக்கூடாது என்பதற்காக ஜோவிகாவை மெட்ரோ ரயிலில் வேலைக்கு செல்லுமாறும், இரவு நேரம் ஆனாலும் தைரியமாக தனியாக வரும்படி வனிதா கூறி இருக்கிறார். அதன்படியே ஜோவிகா மெட்ரோ ரயிலில் தான் தன் பணிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இயக்குனர் பார்த்திபன் அவர்களின் இறுதிப் படத்தில் ஜோவிகா அவர்கள் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும் அந்த படத்தில் உதவி இயக்குனராக மட்டுமில்லாமல் படத்தில் அதிக டெக்னீசியன் வேலைகளையும் அவர் பார்த்து வந்துள்ளார். இந்த தகவலை பிக் பாஸ் வீட்டில் செல்லும் முன் நடிகர் கமல் அவர்கள் மேடையில் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் தரமாக களமிறங்கும் விடாமுயற்சி! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

ஒரு சிறந்த நடிகையாக வருவதற்கு முன் சினிமாவில் என்ன நடக்கிறது, சினிமா என்றால் என்ன, சினிமாவிற்கு பின் நடக்கும் டெக்னீசியன் வேலைகள் என்ன என்பதை முழுதாக தெரிந்து கொண்ட பின் தான் நடிகையாக மாற முடியும். என் மகள் அதற்கு தயாராக வேண்டும் என்பதற்காகத் தான் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பியதாக வனிதா கூறி இருப்பார்.

இந்நிலையில் ஜோவிகா விஜயகுமார் தனக்கு புது மனிதர்களுடன் பழகுவது மிகவும் பிடிக்கும் என்றும் புதிதாக பழகும் நபர்களிடம் பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்பதற்காகவும் தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததாக அவர் கூறினார். அங்கு பல சண்டைகள் நடந்தாலும் அந்த சண்டைகள் உண்மையாக நடக்கிறதா அல்லது அந்த சண்டைக்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததாகவும் ஜோவிகா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

துணிச்சலும் மன தைரியமும் கொண்ட ஜோவிகாவிடம் யாராலும் பேசி ஜெயிக்க முடியாது என வனிதா அந்த மேடையில் கூறியிருப்பார். நடிகையாகவும் முன்னணி ஹீரோயின் ஆக வரவேண்டும் என்ற ஆசை கொண்ட ஜோவிகாவின் முதல் படியான பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு கை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews