Thalaivasal Vijay: 1992 ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் விஜய். இதனாலையே இன்று வரை இவர் தலைவாசல் விஜய் என்று அழைக்கப்படுகிறார். இவர் நடித்த மூன்றாவது படம் தேவர் மகன்.
சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த இந்த படம் 1992 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வெளியானது. கமல்ஹாசன் தயாரித்த இந்த படத்தில் தலைவாசல் விஜய், நாசர், ரேவதி, கௌதமி, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பை பை சொல்லும் கமல்ஹாசன்.. நடுவராக களம் இறங்குகிறாரா நாட்டாமை சரத்குமார்?
இந்தப் படத்தின் கதையை கமல்ஹாசன் 7 நாட்களுக்குள் எழுதி முடித்ததாக கூறப்பட்டது. அதோடு இந்த படத்திற்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தது. இந்த படத்தின் கதைப்படி தலைவாசல் விஜய் சிவாஜி கணேசனின் மூத்த மகன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் இந்த படத்தில் நடித்த ஒரு காட்சி பற்றி தலைவாசல் விஜய் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது ரயில் நிலையத்தில் இறங்கிய கமல்ஹாசனை அழைத்து வரும் சமயத்தில் மது போதையில் குதிரை வண்டியை ஓட்டி வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டிருக்கும்.
அந்த காட்சி முடிந்ததும் சிவாஜி கணேசன் அவர்கள் தலைவாசல் விஜயை அழைத்து குடித்திருக்கிறாயா என கேட்டுள்ளார் அப்போது இல்லை என்று மறுத்ததும் கமலிடமும் மீண்டும் கேட்டுள்ளார். கமலுக்கு தெரியும் வேலை என்று வந்துவிட்டால் குடித்து விட்டு வர மாட்டார் என்று அதனால் அவரும் இல்லை என்று கூறியுள்ளார்.
உடனடியாக சிவாஜி என்னிடம் நன்றாக நடித்திருந்தாய் என்று தலைவாசல் விஜயை பாராட்டி அனுப்பினார். உண்மையில் அந்த காட்சியின் போது குதிரை வண்டியை எப்படி மது போதையில் ஓட்டுவது போன்று நடிப்பது என தெரியவில்லை. அந்த சமயத்தில் வண்டி வந்து கொண்டிருந்த பாதையில் ஒரு கல் கிடந்தது.
அந்த கல்லின் மீது வண்டியின் இன்னொரு சக்கரம் ஏறி வண்டி ஒரு பக்கமாக சரிந்து பின்னர் நேராக வந்தது. வண்டியை நிறுத்திய உடன் சுற்றி இருந்த அனைவரும் கைதட்டினர். இதன் மூலம் அந்த கல்லால் தான் உண்மையில் மது போதையிலேயே வண்டியை ஓட்டியது போன்று காட்சி அமைந்தது என தலைவாசல் விஜய் பகிர்ந்துள்ளார்.