வீச்சு அருவாளால் கையை வெட்டும் காட்சி.. நான் விஜயகாந்தை நம்பினேன்.. தலைவாசல் விஜய் பகிர்ந்த தகவல்..!!

விஜயகாந்த் நடிப்பில் 1994 ஆம் வருடம் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வெளியான திரைப்படம் பெரிய மருது. என் கே விஸ்வநாதன் இயக்கிய இந்த படத்தில் கவுண்டமணி, செந்தில், ரஞ்சிதா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கிராமப்புறத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் ஒரு காட்சியில் தலைவாசல் விஜய் அவர்களது கையை விஜயகாந்த் வீச்சு அருவாளால் வெட்டுவது போன்று எடுக்கப்பட்டிருக்கும். இது பற்றி தலைவாசல் விஜய் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

மூன்று பேருமே நடிகர்கள் தான்.. கமல் படத்தில் இணைந்து நடித்த 3 சகோதரர்கள்.. சுவாரஸ்ய பின்னணி..

அதில் அவர் கூறும்போது பெரிய மருது படபிடிப்பின் போது கையை அருவாளால் வெட்டும் காட்சியை படமாக்க அனைவரும் தயார் நிலையில் இருந்துள்ளனர். ஆனால் டம்மி வீச்சு அருவாள் எடுத்து வரப்படாமல் இருந்துள்ளது.

இதனால் சற்று யோசித்த விஜயகாந்த் தலைவாசல் விஜய் அவர்களை அழைத்து டம்மி அருவா எடுத்து வரவில்லை. அதனால் உண்மையான வீச்சு அருவாள் வைத்து தான் கையை வெட்டும் காட்சி படமாக்கப்பட இருக்கிறது. உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறதா என கேட்டுள்ளார்.

5 முறை மாராடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரபல நடிகர்.. வாழ்க்கை பயணத்தையே மாற்றிய நாடகம்

உடனே தலைவாசல் விஜய் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க என்று கேட்டு யோசித்துப் பார்த்துள்ளார். தனது கைக்கு ஏதேனும் தவறுதலாக நடந்துவிட்டால் விஜயகாந்த் கண்டிப்பாக தன்னை கைவிட மாட்டார் என்று உறுதியாக தலைவாசல் விஜய் நம்பியுள்ளார்.

எனவே உடனடியாக விஜய்காந்திடம் சென்று தான் நடிப்பதற்கு தயார் என கூறியுள்ளார். விஜயகாந்த் சரியாக உண்மையான வீச்சு அருவாள் வைத்து தலைவாசல் விஜய் கையில் கட்டப்பட்டிருந்த வாழைத்தண்டை வெட்டினார்.

நடிகர் திலகம் சிவாஜியை நேரில் சந்தித்து கதை சொல்லிய பாலா! அந்த சிங்கத்திடம் பட்ட பாடு என்ன?

பேட்டியில் இதனை கூறும் போதும் ஏதேனும் தவறுதலாக நடந்திருந்தால் கண்டிப்பாக விஜயகாந்த் என்னை கைவிட்டு இருக்க மாட்டார் என்று எனக்கு தெரியும் அதனால் தான் துணிந்து அந்த காட்சியில் நடித்ததாக கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews