பாடல்களே இல்லாமல், வெறும் 14 நாட்களில் படமாக்கப்பட்ட சிவாஜியின் வித்தியாசமான திரைப்படம் என்ன தெரியுமா?

1930 களிலிருந்து சினிமா என்பது மக்களை மத்தியில் மிகவும் பிரபலமடைய தொடங்கியது. பொதுவாக நாடகத்திலிருந்து சினிமா வந்ததன் காரணமாகத்தான் அதில் வசனங்களும் பாடல்களும் அப்போதைய திரைப்படங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. நாடகங்களில் நடித்து படிப்படியாக முன்னேறி சினிமாவிற்கு வந்த மிகப் பெரிய கலைஞர்களில் ஒருவர் தான் நடிகர் திலகம் சிவாஜி. சரித்திர கதைகளில் தொடங்கி சாமானியனின் வாழ்க்கை கதை வரை பலவிதமான படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

ரவுடி கதாபாத்திரம், நல்லவன், ஏழை, பணக்காரன், நடுத்தர வாழ்க்கை உள்ளவன், மருத்துவர், இன்ஜினியர், ஏழை தொழிலாளி முதலாளி என்னும் சாதாரண கதாபாத்திரங்கள் முதல் கடவுள் அவதாரங்கள், பாரதியார், வ உ சி சிதம்பரனார், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன் போன்ற சரித்திர வேடங்களிலும் கர்ணன், திருவருட்செல்வர் போன்ற இலக்கியங்கள் வந்து கதாபாத்திரங்களை ஏற்று நடித்த உலகத்திலேயே ஒரே நடிகர் அது நம்மளுடைய சிவாஜி கணேசன் ஆக மட்டும் தான் இருக்க முடியும். பொதுவாக நடிகர் சிவாஜியின் திரைப்படங்களில் வசனங்களுக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் கொடுப்பது பாடல் காட்சிகளுக்கு தான்.

மிக சிறப்பான பாடல் காட்சிகளை அவர் அவர் படங்களில் இடம்பெற வைத்திருப்பார் நடிகர் சிவாஜி. அதிலும் பாடல்களில் சிவாஜி காட்டக்கூடிய உடல் மொழியும், ஸ்டைலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட சிவாஜியின் பல பாடல்கள் கருத்து மிகுந்த பாடல்களாக இருக்கும். அப்படிப்பட்ட ஆக்கபூர்வமான பாடல்களில் நடிக்கும் போது ஒரு வாத்தியாரே வந்து நமக்கு ஒரு கருத்து சொல்லக்கூடிய ஒரு உணர்வு பாடலை பார்ப்பவர்களுக்கு மனதில் வந்துவிடும். ஆனால் அதே நேரம் நடிகர் திலகம் சிவாஜி பாடலே இல்லாமல் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது அந்த திரைப்படம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1952 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் கிட்டை தொடர்ந்து நடிகர் சிவாஜிக்கு அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி பல படங்களில் ஒரே நேரத்தில் நடிகர் திலகம் பிசியாக நடித்துக் கொண்டிருந்த பொழுது எஸ் பாலச்சந்தர் எனும் இயக்குனர் அந்த நாள் எனும் ஒரு கதையை நடிகர் சிவாஜியை பார்த்து நேரில் கூறியுள்ளார். இந்த படம் ஒரு மிஸ்டரி திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜியை நேரில் சந்தித்து கதை சொல்லிய பாலா! அந்த சிங்கத்திடம் பட்ட பாடு என்ன?

அந்த காலத்தில் ஒரு படத்தில் நடிக்க ஹீரோக்கள் இரண்டு மாதங்கள் வரை கால்ஷீட் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் சிவாஜி அந்த நாள் படத்தில் நடிப்பதற்கு வெறும் 14 நாட்கள் மட்டுமே காட்சி கொடுத்துள்ளார். உடனே இயக்குனர் எஸ் பாலச்சந்தரும் சரியாக திட்டமிட்டு அந்த படத்தை 14 நாட்களுக்குள் எடுத்து முடித்து விட்டார். இந்தப் படத்தை ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க 1954 ஆம் ஆண்டு படம் வெளியானது. இந்தத் திரைப்படம் சிவாஜியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய புதிய அனுபவத்தை கொடுத்தது. சிவாஜியின் பல பாடல்களை ரசித்து பாடி வந்த அவரது ரசிகர்களுக்கு பாடலே இல்லாமல் சிவாஜி ஒரு படத்தில் நடித்திருப்பது முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் புதிய அனுபவத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் வாரி குவித்தது. மேலும் இந்தத் திரைப்படம் தேசிய விருது பிரிவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதையும் வென்றது. பல சிறப்பு பெற்ற இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் மொத்தமே ஒன்றரை மணி நேரம்தான். இந்த படத்தில் சிவாஜியின் மனைவியாக நடிகை பண்டரிபாய் நடித்திருப்பார். வெறும் ஒன்றரை மணி நேரத்தில் ஒரு மிஸ்டரி தில்லர் கதை அதுவும் பாடல்களே இல்லாமல் சிறப்பாக வெற்றி பெற அதில் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews