பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பை பை சொல்லும் கமல்ஹாசன்.. நடுவராக களம் இறங்குகிறாரா நாட்டாமை சரத்குமார்?

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைக்கும் மிகப்பெரிய ஆளுமை திறன் கொண்ட நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். 2015ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் என்னும் மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற தவறியது. அதைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் 2 திரைப்படத்தை வெளியிட்டார் அதன் பின் படங்களில் ஆர்வம் காட்டாமல் அரசியலில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார் நடிகர் கமலஹாசன். மக்களிடம் நேரடியாக உரையாட அரசியலை கையில் எடுத்த கமலஹாசனுக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. ஏழை எளிய மக்களின் வீட்டிற்குள் சென்று ஆள வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க துவங்கினார்.

பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களை நடிகர் கமலஹாசன் நடத்துவது சரியாக வராது என்ற பல எதிர்ப்புகள் எதிர் வர துவங்கிய நேரத்தில் நடிகர் கமலஹாசன் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த துவங்கினார். அதன்படி கமலஹாசன் தொகுப்பாளராக களம் இறங்கிய பிக் பாஸ் சீசன் 1 மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து சீசன் 2 3 என அடுத்தடுத்து சீசன்களை நடிகர் கமலஹாசனை தொகுத்து வழங்கினார். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் கமலஹாசன் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பொழுது அந்த சீசனை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

அதன் பின் நடிகர் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கச் சென்ற போது அந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார். தற்பொழுது நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக உள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் எதிர்மறையான குணாதிசயங்கள் இந்த நிகழ்ச்சியின் போது வெளிப்பட்டு மக்களால் நிறை குறைகள் கூறுவது வழக்கம் ஆனால் இந்த முறை போட்டியாளர்களை விட நடிகர் கமலஹாசனுக்கு அதிகப்படியான எதிர்மறை விமர்சனங்கள் எனத் தொடங்கியுள்ளது. போட்டியாளர் பிரதீப்யை வெளியேற்றியது நடிகர் கமலஹாசனுக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து ஆறு சீசன்களாக நடுநிலைமை மாறாமல் நிகழ்ச்சியை நடத்தி வந்த நடிகர் கமலஹாசன் இந்த சீசனில் தடுமாறியதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

இதற்கிடையில் நடிகர் கமலஹாசன் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 அதைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் எச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடிக்க தயாராகியுள்ள கமல் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரமில்லாத காரணத்தினால் இந்த சீசன் முடிவிற்கு பின் விலக இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினியின் வேட்டையன் படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் குறித்த மாஸ் அப்டேட்?

அதே நேரத்தில் அடுத்த சீசனை நடிகர் சிம்பு தொகுப்பாளராக இயக்குவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எனக்கு தொடங்கியது. நடிகர் சிம்பு தற்பொழுது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்காக தற்போது துபாயில் சிம்பு இருந்து வருகிறார்.

அதனால் சிம்பு அடுத்த சீசனை தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் கடந்த சீசனில் ஒரு நாள் சர்ப்ரைஸ் விசிட் செய்த நடிகர் சரத்குமார் தொகுப்பாளராக களமிறங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக நடிகர் சரத்குமார் கோடீஸ்வரன் போன்ற ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குவதன் மூலமாக பிரபலத்தின் உச்சியை அடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த சீசனில் யார் தொகுத்து வழங்குவார் என்பது ரசிகர்களின் மத்தியில் பெரும் கேள்வியாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.