பாலியல் தொழிலாளி கதாபாத்திரம்… துணிந்து நடித்த நடிகைகள்..!!

Published:

சினிமாவில் பாலியல் தொழிலாளி என்ற கேரக்டரில் நடிப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அதிலும் குறிப்பாக முன்னணியில் இருக்கும் நடிகைகள் பாலியல் தொழிலாளியாக நடிக்க மிகவும் யோசிப்பார்கள். அந்த கேரக்டரின் இமேஜ் தனது மீது விழுந்தால் அதன் பிறகு அதே மாதிரி கேரக்டர் தான் வரும் என்பதே பலரது எண்ணமாக இருக்கும்.

ஆனாலும் சில நடிகைகள் துணிந்து பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடித்த சில நடிகைகளை தற்போது பார்ப்போம்.

கடந்த 1954 ஆம் ஆண்டு வெளியான எம்ஆர் ராதாவின் ரத்தக்கண்ணீர் என்ற திரைப்படத்தில் அன்றைய குடும்ப பங்கான வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்என் ராஜம், பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். அவர் எம்ஆர் ராதாவிடம் இருந்து பணத்தை கறந்து, ஒரு கட்டத்தில் அவரிடம் பணம் இல்லை என்றவுடன் அடித்து விரட்டி விடும் காட்சியில் நடித்திருப்பார். இந்த படத்தில் எம்ஆர் ராதாவுக்கு இணையாக எம்என் ராஜம் நடிப்பு இருக்கும்.

ரஜினி படத்தில் அறிமுகம்.. ராமராஜனுடன் திருமணம்.. நடிகை நளினியின் திரையுலக பாதை..!

இதனை அடுத்து பாலியல் தொழிலாளியாக நடித்த மற்றொரு முன்னணி நடிகை சரிதா. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தப்புத்தாளங்கள் என்ற படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்து அசதிருப்பார். அந்த படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

பாலியல் தொழிலாளியாக நடித்த மற்றொரு நடிகை ஸ்ரீபிரியா. கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த வாழ்வே மாயம் என்ற திரைப்படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். இறுதியில் கமல்ஹாசன் சாவதற்கு முன்பு அவரது கையால் தாலி கட்டிக் கொள்வார்.

பாலியல் தொழிலாளியாக நடித்த இன்னொரு நடிகை ரம்யா கிருஷ்ணன். பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் தனது முழு திறமையை காட்டி நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசன் நடித்த பஞ்சதந்திரம் என்ற திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். அவரது கொலை தான் இந்த படத்தில் திருப்புமுனையாக இருக்கும் என்பதை படம் பார்த்தவர்கள் அறிந்திருப்பார்கள்.

சிம்பு நடித்த வானம் என்ற திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். அவரது நடிப்பும் உருக்கமாக இருக்கும்.

டீச்சர் என்றாலே இவங்க தான்… கடலோர கவிதைகள் ரேகா… பாரதிராஜாவால் ஜொலித்த நடிகை….!!

குடும்பப்பாங்கான வேடத்தில் பல படங்களில் நடித்த புன்னகை அரசி சினேகாவும் ஒரு படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடித்துள்ளார். அதுதான் தனுஷின் புதுப்பேட்டை திரைப்படம். அதன்பின்னர் தனுஷை அவர் திருமணம் செய்து கொள்வது போன்று கதை செல்லும்.

ஜெயம் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன்பிறகு விக்ரமுடன் அந்நியன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சதா. இவரும் டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான நாயகன் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்காக கமல்ஹாசனுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தில் தான் நடிகை சரண்யா அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சரண்யா, பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். ஆனால் அதன் பிறகு கமல்ஹாசனை திருமணம் செய்து கொள்ளும் கேரக்டரில் அவர் நடித்திருப்பார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் என்ற திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக ஒரு சிறு காட்சியில் நடிகை புவனேஸ்வரி நடித்திருப்பார்.

அதேபோல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அரங்கேற்றம் என்ற திரைப்படத்தில் பிரமிளா, பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பார். பாலியல் தொழில் மூலம் கிடைத்த பணத்தில் தான் அவர் தனது குடும்பத்தை காப்பாற்றும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருக்கும்.

மோகனுடன் அறிமுகம்.. ரஜினியின் நாயகி.. புற்றுநோயால் மரணம்.. நடிகை ஜோதியின் அறியப்படாத தகவல்..!

மேற்கண்ட நடிகைகள் பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடித்தாலும் அவர்களது இமேஜ் எந்த வகையில் பாதிக்கப்படவில்லை. அவர்களது சினிமா மார்க்கெட்டும் பாதிக்கப்படவில்லை. இந்த கேரக்டரில் நடித்த பின்னரும் அவர்கள் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தார்கள்.  அதையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

மேலும் உங்களுக்காக...