பழைய காலத்தில் நடிகைகள் பாடகிகளாக இருப்பார்கள் என்பதும் அவர்களுக்கு தேவையான பாடல்களை அவர்களே பாடி கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் காலம் போக போக பின்னணி பாடகிகள் அதிகம் வந்த பிறகு நடிகைகள் பாடுவதில்லை. ஆனாலும் சில நடிகைகள் தமிழ் திரை உலகில் பாடகிகளாக இருந்துள்ளனர். அவ்வாறு எந்தெந்த நடிகைகள் பாடகிகளாக இருந்தனர் என்பதை பார்ப்போம்.
ரம்யா நம்பீசன்: தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரம்யா நம்பீசன் ஒரு திறமையான பாடகியாவார். இவர் சகலகலா வல்லவன், மன்னார் வகையறா, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஜெயித்த அண்ணன் – தம்பி நடிகர்கள்.. இவ்வளவு பெரிய லிஸ்ட்டா?
மம்தா மோகன் தாஸ்: தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்த மம்தா மோகன் தாஸ் ஒரு சிறந்த பாடகி. அவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். குறிப்பாக தமிழில் விஜய் நடித்த வில்லு திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டாடி மம்மி’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது.
வசுந்தரா தாஸ்: தமிழ் திரை உலக நடிகைகளில், பாடகிகளில் ஒருவர் வசுந்தரா தாஸ். அஜித் நடித்த சிட்டிசன் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த இவர் பல பாடல்களை பாடியுள்ளார். உதாரணமாக முதல்வன் படத்தில் இடம்பெற்ற ‘ஷக்கலக்க பேபி’, குஷி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ ஆகிய பாடல்களை கூறலாம்.
ஆண்ட்ரியா: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியாவும் ஒரு பாடகி என்பது பலர் அறிந்ததே. குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது.
முதல் மரியாதை: படம் ஓடாது என கைவிட்ட படம்.. ஆனால் தன்னம்பிக்கையுடன் ஜெயித்த பாரதிராஜா..!
ஸ்ருதிஹாசன்: உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பாடல்களும் பாடுவார். இவர் வேதாளம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு ஆங்கில பாடல் உள்பட பல பாடல்களை பாடி உள்ளார்.
கனிகா: தமிழ் திரை உலகின் பாடகிகளில் ஒருவர் நடிகை கனிகா என்பது ஆச்சரியமான தகவல். பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அஜித்தின் வரலாறு, சேரனின் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் இவர் நடித்து வருகிறார். இவர் பை ஸ்டார் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பாடகி என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் ஒரு திரைப்படத்தில் பாடியுள்ளார். கீர்த்தி சுரேஷ் விக்ரமுடன் நடித்த ‘சாமி ஸ்கொயர்’ என்ற திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ‘புது மெட்ரோ ரயில்’ என்ற பாடலை பாடியுள்ளார்.
நித்யா மேனன்: தமிழ், மலையாள திரை உலகில் திறமையான நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன். பல பாடல்களை பாடி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்ற திரைப்படத்தில் மட்டும் 3 பாடல்களை இவர் பாடியுள்ளார். மார்கழி திங்கள் என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
ஒரே படத்தில் இணைந்து நடித்த அம்பிகா – ராதா சகோதரிகள்.. சிவாஜி, கமல், ரஜினியுடன் ஹிட் படங்கள்..!
ராஷி கண்ணா: முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணாவும் ஒரு பாடகி தான். இவர் தமிழ் திரைப்படங்களில் பாடவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பாடியுள்ளார்.