ஒரே படத்தில் இணைந்து நடித்த அம்பிகா – ராதா சகோதரிகள்.. சிவாஜி, கமல், ரஜினியுடன் ஹிட் படங்கள்..!

திரை உலகில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் படத்தில் நடிக்க வருவதும் சில சமயம் இருவரும் இணைந்து நடிப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த காலத்திலேயே பத்மினி, ராகினி, லலிதா ஆகியோர் இணைந்து நடித்தனர். அதன் பிறகு பல சகோதர சகோதரிகள் ஒரே படத்தில் நடித்தனர்.

அந்த வகையில் கடந்த எண்பதுகளில்  பிரபலமாக இருந்த சகோதரி நடிகைகள் என்றால் அவர்கள் அம்பிகா மற்றும் ராதா. இருவரும் எண்பதுகளில் உச்ச நட்சத்திரமாக இருந்தனர். கமல், ரஜினி உட்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்தனர். ஒரு சில படங்களில் அம்பிகா மற்றும் ராதா இணைந்து நடித்துள்ளனர்.

அமெரிக்க துணை அதிபரின் உறவினர்.. இந்திய அணிக்கு விளையாடிய கிரிக்கெட் வீராங்கனை.. யார் இந்த தமிழ் நடிகை..!

ambika and radha2

அம்பிகா மற்றும் ராதா இணைந்து நடித்த முதல் திரைப்படம் எங்கேயோ கேட்ட குரல். ரஜினிகாந்த் ஜோடியாக அம்பிகா நடிக்க, திடீரென அம்பிகா ரஜினியை விட்டு வேறு ஒருவருடன் ஓடி விடுவார். அதன் பின் ராதாதான் ரஜினிக்கு ஆதரவாக இருப்பார். பிறகு மனம் திருந்தி மீண்டும் அம்பிகா வரும்போது ரஜினி அவரை ஏற்றுக் கொண்டாரா என்பது தான் இந்த படத்தின் கதை.

இதையடுத்து சிவாஜி கணேசன், பிரபு நடித்த வெள்ளை ரோஜா திரைப்படத்தில் அம்பிகா, ராதா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். பிரபுவுக்கு ஜோடியாக அம்பிகாவும், சுரேஷூக்கு ஜோடியாக ராதாவும் நடித்தனர். இந்த படத்தில் இருவருக்குமே நல்ல கேரக்டர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

ambika and radha3

இதனை அடுத்து மோகன் நடித்த அம்பிகை நேரில் வந்தாள் என்ற திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் ராதா நாயகியாக நடிக்க அம்பிகா சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

1985ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான இதய கோவில் என்ற திரைப்படத்தில் அம்பிகா, ராதா இணைந்து நடித்திருந்தனர்.  இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகிய போதிலும் இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.

இதன் பிறகு 1986ஆம் ஆண்டு வெளியான மனக்கணக்கு என்ற திரைப்படத்தில் அம்பிகா, ராதா இருவரும் இணைந்து நடித்தனர். விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடித்த இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

இதனை அடுத்து 1987ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த காதல் பரிசு என்ற திரைப்படத்தில் இருவரும் நடித்திருந்தனர். இருவருமே கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ambika and radha1

இதன் பின்னர் சிவாஜி கணேசன் நடித்த தாம்பத்தியம் என்ற திரைப்படத்தில் அம்பிகா, ராதா இருவருமே இணைந்து நடித்தனர். இந்த படம் மிகவும் சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனாலும் அம்பிகா, ராதா இருவருக்குமே வலுவான கேரக்டர் இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சத்யராஜ் நாயகனாக நடித்த அண்ணா நகர் முதல் தெரு என்ற திரைப்படத்தில் அம்பிகா, ராதா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் சத்யராஜுக்கு ராதா ஜோடியாக இருப்பார். அம்பிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். 1988ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

தமிழில் 13 படங்கள்.. அரசியலில் டெபாசிட் இழப்பு.. நடிகை நக்மாவின் அறியப்படாத தகவல்..!

தமிழ் மட்டுமின்றி ஒரு சில தெலுங்கு படங்களிலும் அம்பிகா, ராதா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தெலுங்கிலும் சகோதரிகள் இருவரும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...