ரஜினி, கமல் படங்களில் நடிப்பு.. அரசியலிலும் வெற்றி.. ‘வாரிசு’ நடிகையின் வாழ்க்கைப்பாதை..!

By Bala Siva

Published:

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் நடித்து அதன் பின்னர் நடிகையாக பிரபலமானதால் அரசியலிலும் இணைந்து வெற்றி பெற்று சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வரை நடித்த நடிகை ஜெயசுதாவின் வாழ்க்கை வரலாற்றை தான் தற்போது பார்க்க போகிறோம்.

நடிகை ஜெயசுதா ஆந்திராவை சேர்ந்தவர். அவரது தாயார் ஒரு நடிகை என்பதாலும் அவரது அத்தை நடிகை விஜய நிர்மலா என்பதாலும் அவருக்கு சிறுவயதிலேயே நடிப்பின் மீது ஆசை ஏற்பட்டது. அவரது பெற்றோர்களும் நடிப்பிற்கு சம்மதம் சொல்ல அவர் முறையாக நடனம், நாட்டியத்தை கற்றார்.

பாரதிராஜா படத்தில் அறிமுகமாகி ஒரு நாட்டிற்கே பிரதமரான நடிகை.. ஒரு அழகான காதலும் உண்டு..!

jayasudha

அத்தை நிர்மலா விஜய் நிர்மலாவுடன் அவ்வப்போது அவர் படப்பிடிப்புக்கு செல்லும்போதுதான் 12வது வயதில் அவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் பிரபல நடிகரான கிருஷ்ணா உள்பட பலருடன் அவர் நடித்துள்ளார். கமல்ஹாசன் ஜோடியாக ஒரு மலையாள படத்திலும் நடித்துள்ளார்.

jayasudha4

இந்த நிலையில் தான் கே.பாலச்சந்தர் பார்வை பட்டதை அடுத்து அவர்
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார். கே.பாலச்சந்தர் அவரை அறிமுகப்படுத்திய நிலையில் அதன் பிறகு அவர் அரங்கேற்றம் உள்பட ஒரு சில படங்களில் வாய்ப்பு கொடுத்தார். பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற படத்தில் ரஜினியை ஒருதலையாக காதலிக்கும் ஆடியோ பெண்ணாக சூப்பராக நடித்திருப்பார். அதேபோல் அபூர்வ ராகங்கள் படத்தில் ஸ்ரீவித்யாவின் மகளாக நடித்திருப்பார்.

jayasudha3 scaled 1

இந்த நிலையில் சிறிது காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்த அவர் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டார். நடிகை ஜெயசுதா, ராஜேந்தர் பிரசாத் என்பவரை கடந்த 1982ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு நிதின் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

‘முந்தானை முடிச்சு’ படத்திற்கு முன்பே 7 படங்கள் நடித்திருக்கிறாரா ஊர்வசி..?

நடிகை ஜெயசுதா சினிமாவில் மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்டு அதிலும் வெற்றிவாகை சூடினார். முதல் முதலாக அவர் ஆந்திராவில் 2009ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். தற்போது அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.

jayasudha1

ஒரு பக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் இன்னொரு பக்கம் திரையுலகில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். கார்த்தி நடித்த ‘தோழா’ திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த ஜெயசுதா ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல் சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு வெற்றி பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த்: 100வது பட பரிதாபங்கள்!

சினிமா, அரசியல் என இரண்டிலும் பிரபலமாகி தனது திறமையை வெளிப்படுத்திய ஜெயசுதா தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத நடிகை என்றால் அது மிகையாகாது.