‘முந்தானை முடிச்சு’ படத்திற்கு முன்பே 7 படங்கள் நடித்திருக்கிறாரா ஊர்வசி..?

கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ்த்திரை உலகில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஊர்வசி. ஆனால் தமிழில் அறிமுகமாகும் முன்பே அவர் 7 மலையாள படங்களில் நடித்துள்ளார்.

urvashi family

கேரளாவை சேர்ந்த நடிகர் ஊர்வசியின் குடும்பம் சென்னைக்கு வந்ததை அடுத்து சென்னையில்தான் அவர் தனது பள்ளி படிப்பை முடித்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.

அந்த நாள்: முதல் காட்சியிலேயே கொல்லப்படும் சிவாஜி.. பாடல்கள் இல்லாத ஒரு அற்புத துப்பறியும் படம்..!

ஆரம்ப காலத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக சில மலையாள படங்களில் நடித்தார். அதன் பிறகு அவர் முக்கிய கேரக்டர்களில் மலையாள படங்களில் நடித்தார். மொத்தம் ஏழு படங்கள் அவர் மலையாளத்தில் நடித்து முடித்த நிலையில் தான் பாக்யராஜ் கண்ணில் பட்டதால் அவர் முந்தானை முடிச்சு படத்தில் நாயகி ஆனார்.

urvashi 3

அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்கு ஒரே ஆண்டில் பதினைந்து படங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தால், அன்பே ஓடிவா, எழுதாத சட்டங்கள், ஊருக்கு உபதேசம், வெள்ளை புறா ஒன்று என முக்கிய நடிகர்களுடன் படங்கள் குவிந்தது.

கமல்ஹாசனுடன் ‘அந்த ஒரு நிமிடம்’, பிரபுவுடன் ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’, மோகனுடன் ‘தெய்வப்பிறவி’ என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்துள்ளார்.

urvashi 1

ஊர்வசியின் நடிப்பை பார்த்து கமல்ஹாசன் வியந்த படம் என்றால் அது ’மைக்கேல் மதன காமராஜன்’ படம்தான். அந்த படத்தில் ஐயர் பெண்ணாக அவர் கலக்கி இருப்பார். அதிலும் ஒரு சில நேரத்தில் கமல்ஹாசனை மிஞ்சிய நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருப்பார். அதன் பிறகு கமல்ஹாசன் தனது பல படங்களில் அவரை பயன்படுத்திக் கொண்டார்.

எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு வெற்றி பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த்: 100வது பட பரிதாபங்கள்!

இந்த நிலையில் நடிகை ஊர்வசி மலையாள நடிகர் மனோஜ் கே விஜயன் என்பவரை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அதன் பிறகு 2008ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவப்பிரசாத் என்பவரை ஊர்வசி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

urvashi 2

தற்போது ஊர்வசி குணசித்திர வேடங்களில் சில படங்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில்கூட அவர் நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’, ‘யானை முகத்தான்’, ‘காசே தான் கடவுளடா’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவர் பிரசாந்த் நடித்துவரும் ‘அந்தகன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி ஒரு படத்தை மிஸ் பண்ணிட்டோமே.. பிரபல நடிகர்கள் மிஸ் செய்த படங்கள்..!

நடிகை ஊர்வசி  சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மலையாள திரைப்படம் ‘அச்சுவின்டே அம்மா’ என்ற படத்திற்காக பெற்றுள்ளார். அதேபோல் கேரள மாநில விருதுகளையும் தமிழ்நாடு அரசு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...